40வது நாளை எட்டியது நிதி முடக்கம்!! சம்பளம் போட முடியுல! கையை பிசையும் ட்ரம்ப்!! புதிய திட்டம்!!
அமெரிக்க அரசுக்கான நிதி முடக்கம் நேற்று 40வது நாளை எட்டியதால், செனட் சபையில் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சு நடந்தது.
அமெரிக்காவில் அரசு முடக்கம் நேற்றுடன் 40 நாட்களை எட்டியுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் நீண்ட கால முடக்கமாக மாறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் பெறாமல் தவித்து வருகின்றனர். உணவு உதவித் திட்டங்கள், விமான போக்குவரத்து, தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், செனட்டில் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இடையேயான இழுபறி தொடர்கிறது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று புதிய நிதி ஆண்டு தொடங்குகிறது. இதற்கான செலவுகளை கட்டுப்படுத்தும் நிதி மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும். கடந்த அக்டோபர் 1 அன்று, ஜனநாயக கட்சியின் ஆதரவு இன்றி மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இதையும் படிங்க: ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு எதுக்கு நோபல் பரிசு!! அதிபர் ட்ரம்ப் கிண்டல் பேச்சு!
அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்துக்கு எதிரான இந்த நிலை, அரசின் பல்வேறு துறைகளை முடக்கியது. முந்தைய அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான (ஓபாமாகேர்) அரசு மானியங்கள் டிசம்பரில் முடிவடைய உள்ளன. இதை நீட்டிக்க ஜனநாயக கட்சியினர் கோருகின்றனர். ஆனால், அதிபர் டிரம்ப் இதை ஏற்க மறுக்கிறார். இதனால், நிதி மசோதா விவாதம் தடைபட்டுள்ளது.
அக்டோபர் மாதம் முழுவதும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இந்நிலையில், கடந்த வாரம் நடந்த மேயர் மற்றும் மாகாண தேர்தல்களில் குடியரசு கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. இதற்கு அரசு முடக்கமே காரணம் என்று அதிபர் டிரம்ப் கருதுகிறார்.
எனவே, முடக்கத்தை விரைவில் நீக்க விரும்புகிறார். இந்த முடக்கம், ஊழியர்களுக்கு சம்பள இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாநிலங்களில் உணவு உதவி திட்டங்கள் (SNAP) பாதிக்கப்பட்டன. விமானிகள், ஏர்போர்ட் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விமானங்கள் ரத்தாகின்றன. தேசிய பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த இழுபறிக்கு செனட்டில் உள்ள 'பிலிபஸ்டர்' விதியே முக்கிய காரணம். இந்த விதின்படி, ஒரு செனட் உறுப்பினர் மசோதா தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்றால் அது வாக்கெடுப்புக்கு வராது. இதை நிறுத்த, 60 உறுப்பினர்களின் 'சூப்பர் மெஜாரிட்டி' ஆதரவு தேவை. தற்போது குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களே உள்ளனர். எனவே, ஜனநாயகர்களின் ஆதரவு இன்றி மசோதா நிறைவேற்ற முடியவில்லை. இந்த விதியை நீக்கும்படி அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
'பிலிபஸ்டர்' விதியை நீக்க, 51 உறுப்பினர்களின் 'எளிய மெஜாரிட்டி' போதும். இதன் பிறகு, அரசு முடக்கத்தை எளிதாக முடிவுக்கு கொண்டு வரலாம். மேலும், வாக்கர் ஐடி சட்டம், மெயில்-இன் வாக்குப்பதிவு தடை போன்ற டிரம்பின் தேர்தல் சீர்திருத்தங்களை விரைவாக நிறைவேற்றலாம்.
ஆனால், செனட் குடியரசு தலைவர் ஜான் தூன் உள்ளிட்ட பலர் இந்த 'நியூக்ளியர் ஆப்ஷன்' எனப்படும் விதி நீக்கத்தை எதிர்க்கின்றனர். இது எதிர்காலத்தில் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால், அவர்களின் சட்டங்களை எளிதாக நிறைவேற்ற அனுமதிக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். சில குடியரசு உறுப்பினர்கள், உணவு உதவி மற்றும் அரசு திறனை மீட்டெடுக்க 'பிலிபஸ்டர்' நீக்கத்தை ஆதரிக்கலாம் என்று கூறுகின்றனர். நேற்று (நவம்பர் 9) செனட்டில் இரு கட்சிகளுக்கும் இடையேயான ஒரு கூட்டு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 60-40 வாக்குகளுடன் மசோதாவை முன்னேற்றலாம் என்று விவாதிக்கப்பட்டது.
இந்த முடக்கம் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கிறது. ஊழியர்கள் பலர் கடனில் சிக்கி தவிக்கின்றனர். உலக அளவில் அமெரிக்காவின் பட்ஜெட் பேச்சுகள் கவனத்தை ஈர்க்கின்றன. நிபுணர்கள், இந்த இழுபறி டிசம்பர் வரை நீடிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். அதிபர் டிரம்ப், டிரூத் சோஷியலில் "பிலிபஸ்டரை நீக்கினால், குடியரசு கட்சி பல ஆண்டுகள் வெற்றி பெறும். இல்லையெனில், பேரழிவு!" என்று எழுதியுள்ளார். இந்த விவாதம், அமெரிக்க அரசியலின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், உலக கவனத்தை ஈர்க்கிறது.
இதையும் படிங்க: வரியை விமர்சினம் செய்றவங்க முட்டாள்!! அமெரிக்கா மதிப்பு என்ன ஆகிறது? ட்ரம்ப் காட்டம்!