முடிந்தது 163 ஆண்டு பாரம்பரியம்! வரலாற்றை மாற்றிய ட்ரம்ப்! அமெரிக்க டாலரில் இனி அதிபரின் கையெழுத்து!!
அமெரிக்க கரன்சியான டாலர் நோட்டுகளில், 165 ஆண்டுகளாக நிதி அமைச்சரின் கையெழுத்தே இடம்பெற்ற நிலையில், அந்நாட்டின், 250வது சுதந்திர தினத்தை ஒட்டி, முதன்முறையாக அதிபரின் கையெழுத்து இடம்பெற உள்ளது.
அமெரிக்கா 1776 ஜூலை 4 அன்று ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவை (Semiquincentennial) இந்த 2026ஆம் ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறது.
இதை முன்னிட்டு, அமெரிக்க நிதித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 165 ஆண்டுகளாக டாலர் நோட்டுகளில் நிதி அமைச்சரின் (Treasurer) கையெழுத்து மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், இனி அதிபர் டொனால்ட் டிரம்பின் கையெழுத்தும் இடம்பெற உள்ளது.
அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்காட் பெசென்ட் மற்றும் நிதி அமைச்சர் பிராண்டன் பீச் இணைந்து இந்த முடிவை அறிவித்தனர். டாலர் நோட்டுகளில் அதிபரின் கையெழுத்து இடம்பெறுவது இதுவே முதல் முறை. 1861ஆம் ஆண்டு டாலர் நோட்டுகள் அறிமுகமானதிலிருந்து இந்த மரபு தொடர்ந்து வந்தது. இப்போது அந்த மரபு உடைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!! பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதங்களுக்கு தடை..!! ரஷ்யா அதிரடி முடிவு..!!
இந்த மாற்றம் அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை கௌரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் 100 டாலர் நோட்டுகளில் ஜூன் மாதம் முதல் இந்த புதிய கையெழுத்துகள் அச்சிடப்பட உள்ளன.
பின்னர் பிற மதிப்புள்ள நோட்டுகளிலும் இது நடைமுறைக்கு வரும். அதிபர் டிரம்பின் கையெழுத்துடன், நிதித்துறை செயலர் ஸ்காட் பெசென்ட்டின் கையெழுத்தும் இடம்பெறும். முன்பு இருந்த நிதி அமைச்சரின் (Treasurer) கையெழுத்து இடத்தை இது மாற்றும்.
இதேபோல், 250வது சுதந்திர விழாவை ஒட்டி 24 காரட் தங்க நாணயம் ஒன்றும் வெளியிட அமெரிக்க கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் அதிபர் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 1776-2026 என்ற ஆண்டுகளுடன் சுதந்திரம் தொடர்பான வார்த்தைகளும் இடம்பெறும். சிறப்பு தபால் தலைகளும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. நிதித்துறை அதிகாரிகள் இதை “அமெரிக்காவின் வலிமை, செழிப்பு மற்றும் அதிபர் டிரம்பின் தலைமையை” பிரதிபலிக்கும் நடவடிக்கை என்று விவரித்துள்ளனர். புதிய நோட்டுகள் சேகரிப்பாளர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் இந்த செய்தி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் இதை வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணிக்கின்றனர்.
இதையும் படிங்க: “மனித உயிருக்கு ஆபத்து...” - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு - பரபரப்பு காரணம்...!