×
 

Breaking News: பாகிஸ்தானில் அடுத்த அதிர்ச்சி: ராணுவத் தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருப்பினும், எஃப்சி முகாம் அருகே ஒரு தற்கொலை குண்டுதாரி ஒரு வாகனத்தை வெடிக்கச் செய்தார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தளத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளத்திற்குள் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நுழைந்து தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டாங்க் மாவட்டத்தில் உள்ள ஜந்தோலா ராணுவ முகாமில் இந்த தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாதக் குழுவான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக நம்பப்படுகிறது.

தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் எல்லைப் படை முகாம் அருகே நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் எட்டு முதல் ஒன்பது தீவிரவாதிகளைக் கொன்றதாக பாகிஸ்தானில் இருந்து ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜான்டோலாவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் ஜந்தோலா சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றனர். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருப்பினும், எஃப்சி முகாம் அருகே ஒரு தற்கொலை குண்டுதாரி ஒரு வாகனத்தை வெடிக்கச் செய்தார்.


 
மார்ச் 11 அன்று,முக்கியத்துவம் வாய்ந்த போலன் பள்ளத்தாக்கில், குவெட்டா-பெஷாவர் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸை பலூச் விடுதலை படை கடத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ரயிலில் 200 பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 450க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மிகுந்த முயற்சிக்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவம் சுமார் 200 பயணிகளை மீட்டுள்ளது. தாக்குதல் நடத்திய 50 பலூச் விடுதலைப் படையினரை பாகிஸ்தான் ராணுவம் கொன்றதாகக் கூறியுள்ளது. ஆனால், பலூச் விடுதலைப் படையினர் இன்னும் 150 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்களை சிறைபிடித்து வைத்து இருப்பதாகக் கூறுகிறது.

இதையும் படிங்க: பேனர் வைக்க சென்ற இளைஞர்கள் பலி.. போலீசார் விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share