×
 

விஜய் காரை வழிமறித்த TVK நிர்வாகி அஜிதா மீண்டும் ICU- வில் அனுமதி... உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை...!

தமிழக வெற்றி கழக நிர்வாகி அஜிதா ஆக்னல் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.

விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகியை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டிருந்த நிலையில், சமாதானத்தை ஏற்காமல் விஜயின் காரை வழிமறித்த தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். என்ன நடந்தாலும் நியாயம் கிடைக்கும் வரை நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி இருந்தனர். தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததே அஜிதா தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே, சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்பியதை தாங்கிக் கொள்ள முடியாமல் மன உளைச்சலில், அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இது தமிழ்நாடு... பாஜகவுக்கு வாய்ப்பே இல்ல... செங்கோட்டையன் திட்டவட்டம்..!

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நேற்று ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் அஜிதாவின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திமுக கைக்கூலி எனக் கூறியதால் அஜிதா இது போன்ற முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: “விஜய் பத்தி எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க”... வதந்தி பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன ப.சிதம்பரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share