தவெக பதிவு செய்யப்பட்ட கட்சி... எங்களுக்கும் அழைப்பு கொடுக்கணும்... விஜய் கடிதம்...!
தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அலை ஒன்று எழுந்திருக்கிறது. அது தமிழக வெற்றிக் கழகம். இந்தக் கட்சி, பிரபல நடிகர் விஜயின் தலைமையில் உருவானது, மக்கள் நலன், சமூக நீதி மற்றும் நேர்மையை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு இயக்கமாகத் திகழ்கிறது. 2024ஆம் ஆண்டு தொடங்கி, இன்று வரை இது தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது.
கட்சியின் தொடக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது, அங்கு விஜய் தனது பேச்சில் தமிழ்நாட்டின் அடிப்படை சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார். ஊழல், சாதி பாகுபாடு, பெண்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளை அவர் வெளிப்படுத்தினார்.
தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மிக தீவிரமாக பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் தங்கள் கட்சியை ஆழ படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தங்கள் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் தங்களை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் புதிய திருப்பம்... Ex. எம். எல்.ஏ.க்கள் தவெகவில் ஐக்கியம்...!
முறையாக பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடிமகனின் குரலையும் தவெக பதிவு செய்ய விரும்புகிறது என்று தெரிவித்தார். அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "புதுசா கட்சி ஆரம்பிச்ச உனக்கே இவ்வளவு அதப்புன்னா... எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ..." - மீண்டும் விஜய்யை சீண்டிய உதயநிதி...!