#BREAKING அடேங்கப்பா... ஆரம்பமே அடித்து தூக்கிய தவெக... மதுராந்தகம், தாராபுரத்தில் இவ்வளவு லீடா?
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கனிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில்
கோ. ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பி. சுகந்தி ஆகியோர் களம் கண்டனர். தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பி. சத்தியபாமா, திமுக
வேட்பாளராக எஸ். சுகன்யா, அதிமுக வேட்பாளராக கே. பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மு. கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பி.லட்சுமணன் போட்டியிட்டனர்.
இரண்டு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவிய நிலையில், தற்போது தபால் வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 31வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 19, அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 13 வாக்குகளை பெற்றுள்ளனர்.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 81 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் திமுக வேட்பாளர் சுகன்யா 80 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 52 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.லட்சுமணன் 2 வாக்குகளும் பெற்றுள்ளனர். மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகளும், தாராபுரத்தில் 1,201 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், ஆளுங்கட்சியின் செல்வாக்கை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் இரு தொகுதிகளிலும் தீவிரமாகப் பிரசாரம் செய்து ரோடு ஷோ நடத்தியிருந்தார். எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியின் செல்வாக்கு குறித்த மதிப்பீட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அதிமுகவுக்கும் இந்தத் தேர்தல் முக்கியமானதாகும். இந்தத் தொகுதிகள் தங்களுடைய அரசியல் செல்வாக்கு உள்ள பகுதிகள் என அக்கட்சி தலைமை வலியுறுத்தி வந்துள்ளது. இங்கு கிடைக்கும் முடிவுகள் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
2019 முதல் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்த திமுகவுக்கு, 2026 பொதுத்தேர்தலுக்குப் பிறகு தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வது முக்கியமான சவாலாக உள்ளது.
இதையும் படிங்க: மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!