×
 

செயலில் காட்டிய மானாமதுரை எம்எல்ஏ..! மகளுக்கு அரசு பள்ளியில் அட்மிஷன்..! செம்ம இன்ஸ்பிரேஷன்..!!

தமிழக வெற்றி கழகத்தின் மானாமதுரை எம்எல்ஏ, தனது மகளை அரசு பள்ளியில் கல்வியை தொடர வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. டி.கே.எஸ். இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை அரசுப் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருப்புவனம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், திருப்புவனம் ஒன்றியத்தில் வேரூன்றிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர். புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய அவர், பி.பார்ம் படிப்பு முடித்தவர். மனைவி ஜெயலட்சுமி, ஒரு மகன் மற்றும் மகள் தேவமித்ரா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இளங்கோவன், தனது செயலால் அதை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

தேவமித்ரா ஏற்கெனவே அகரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வந்தார். எம்.எல்.ஏ. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், தந்தை இளங்கோவன் மகளைத் தனியார் பள்ளிக்கு மாற்ற விரும்பவில்லை. அதற்கு பதிலாக, திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்தார்.

இதையும் படிங்க: இது நம்ப லிஸ்டிலையே இல்லையே... முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தவெக செய்யப்போகும் தரமான சம்பவம்... ஷாக்கில் மத்திய அரசு...!

இளங்கோவன் தனது மனைவியுடன் பள்ளிக்குச் சென்று மகளைச் சேர்த்துவிட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராவிடம் பள்ளியின் தேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். இந்த முடிவு குறித்து இளங்கோவன் கூறுகையில், தானும் அரசுப் பள்ளியில்தான் படித்ததாகவும், தனது மகளும் அரசுப் பள்ளியிலேயே கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share