×
 

எவ்ளோ ஆசையா இருந்தோம்? இப்படி பண்ணிட்டாங்களே! விரக்தியில் தவெக தொண்டர்கள்...

விஜயை காண ஆசையாக இருந்ததாகவும் ஆனால் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் பெரம்பலூர் தவெக தொண்டர்கள் கூறினர்.

தமிழக அரசியலின் புதிய அலைகளை உருவாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் சமீபத்திய சுற்றுப்பயணம், தனது தொடக்கத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஒரு பகுதியாக, விஜய் தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நடத்தவிருந்த பிரச்சார சுற்றுப்பயணத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார்.

இந்த சுற்றுப்பயணம், தளபதி 2026 அரசியல் பிரச்சார பயணம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் 16 நாட்களுக்கான திட்டமிட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் இந்தப் பயணம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைத் தொடும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பெரம்பலூர் பகுதியில் எதிர்பார்த்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.

திருச்சியில் உரையாற்றிய பிறகு, அரியலூர் வழியாக குன்னம் பகுதிக்குச் சென்றார். அங்கு மக்களைச் சந்திக்காமலேயே புறப்பட்டு, பெரம்பலூருக்குச் செல்லாமல் சென்னை திரும்பினார். விஜயின் பெரம்பலூர் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்றும் மதியம் ஒரு மணியிலிருந்து காத்திருந்ததாகவும், இருந்தும் விதையை பார்க்க முடியாமல் போனதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: BRO! அரசியல் SATURDAY பார்ட்டி இல்ல… 24×7 DUTY… வைரலாகும் போஸ்டர்கள்

வெவ்வேறு ஊர்களில் இருந்து விஜயை காண வருகை புரிந்துள்ளதாகவும் ஆனால் அவரது சுற்றுப்பயணம் பெரம்பலூர் மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாகவும் கூறுகின்றனர். எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருந்தோம்., இப்படி பண்ணிட்டாங்க என மனம் வருந்தி கூறினர் தொண்டர்கள்.

இதையும் படிங்க: ஹப்பா… என்னா கூட்டம்! ஸ்தம்பித்த பெரம்பலூர்… சென்னைக்கே RETURN வந்த விஜய்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share