×
 

வாய ஒடச்சிடுவேன்..! விஜயை விமர்சித்த நபர்..!! துரத்திச் சென்று லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்..!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை விமர்சனம் செய்த நபரை பெண் திட்டி அனுப்பிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது அரசியல் அறிமுகத்தை முழுமையாக்கும் விதத்தில் சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், மார்ச் 30 அன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்காக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து காலையில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி நோக்கி கிளம்பினார்.

நீலாங்கரை இல்லத்திலிருந்து விஜய் காரில் செல்லும் பொழுது பைக்கில் விமர்சித்துள்ளார். “இன்னும் எத்தனை பேரை கொல்ல போறானோ..?” என்று அவர் விமர்சித்து சென்றார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் விஜயை விமர்சித்தன நபரை திட்டினார். தேவை இல்லாம பேசாதீங்க என்றும் வண்டியை நிறுத்துங்க எனவும் கூறி துரத்திச் சென்றார்.

இதையும் படிங்க: விசில் போடு..! நெருங்கும் தேர்தல்... திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் விஜய்..!!

தேவையில்லாமல் பேசினால் வாயை உடைத்து விடுவேன் என்றும் அந்தப் பெண் திட்டி அனுப்பினார். விஜயைப் பற்றி பேசியதும் கோபமடைந்த பெண் விமர்சனம் செய்த நபரை திட்டிய அனுப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு ஆதரவாக பேசிய பெண்ணின் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்... வெளியானது சிக்கிய 2 பேரின் அதிர்ச்சி பின்னணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share