×
 

விஜய் இப்படி செய்வாருன்னு நினைக்கவே இல்ல... அதிருப்தியுடன் திருப்பிச் சென்ற தொண்டர்கள்...!

 விஜயை வரவேற்க வாஞ்சூர் ரவுண்டானாவில் செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக வருகை தந்து நாகப்பட்டினம், திருவாரூர் இந்த இரண்டு மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் வழியாக தான் விஜய், புத்தூர் சென்று அங்கிருந்து அண்ணாசாலைக்குச் சென்று அங்கு உரையாற்றவிருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் அவர் காரைக்கால் வழியாக வந்தால் வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு அங்கிருந்து, புத்தூர் ரவுண்டானா வழியாக அண்ணாசிலை பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேச இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய திட்டமிடல் திடீர் என்று மாற்றப்பட்டு சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக சென்றதன் காரணமாக திருச்சியிலிருந்து விஜய் தஞ்சாவூர் வழியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரக்கூடிய காரணத்தினால் வாஞ்சூர் பகுதி வழியாக அண்ணாசாலை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இப்பகுதியில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்த நிலையில், போலீசாரின் அறிவுறுத்தலின் படியே வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் நேரடியாக திருச்சியிலிருந்து தஞ்சாவூர், தஞ்சாவூரில இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து புத்தூர் ரவுண்டானா பகுதிக்கு செல்வதற்குதான் நேரடியான வழி இருக்கிறது. இல்லையென்றால் இந்த வாஞ்சூர் பகுதிக்கு வருவதற்கு சுற்றிதான் வர வேண்டும். அதாவது புத்தூர் ரவுண்டானா வந்து, அங்கிருந்து, திரும்ப வாஞ்சூர் ரவுண்டானா பகுதிக்கு வந்து, மீண்டும் இங்கிருந்துதான் பேசக்கூடிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், இது சிரமமாக இருக்கும் என்பதன் காரணமாக, இந்த பகுதியில் அந்த வரவேற்பு நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: சுற்றுப்பயணத்திற்கு சூறாவளியாய் புறப்பட்ட விஜய்... நாகையில் என்ன பேசப்போகிறார் தெரியுமா??

குறிப்பாக தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை பொறுத்தவரை, விஜய் பேசுவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதோ, அதை தாண்டி வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் நேற்றிலிருந்து தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அதுமட்டுமின்றி காலை முதலே ஏராளமான தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஏனென்றால் விஜய் நாகப்பட்டினம் மாவட்டத்திற்குள் நுழைய போகிறார். இங்கிருந்து விஜயை நாம் வரவேற்று அழைத்துச் சென்று புத்தூர் அண்ணா சாலை சந்திப்பு பகுதியில் அவரை பேச வைக்க போகிறோம். அங்கிருந்து அவர் திருவாரூர் செல்ல போகிறார் என்ற திட்டமிடல்களுடன் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

ஆனால் தற்போது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையடுத்து ஏராளமான தவெக தொண்டர்கள் ஏமாற்றுத்துடன் விஜய் பேசவுள்ள புத்தூர் அண்ணாசாலை சந்திப்பு நோக்கி புறப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ரூட்டை மாற்றிய விஜய்... தவெக சுற்றுப்பயண திட்டத்தில் அதிரடி மாற்றம் - வெளியானது முக்கிய தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share