ஈரான் எங்கள ஒன்னுமே பண்ண முடியாது!! துபாய் மாலில் கெத்தாக நடை போட்ட அதிபர், இளவரசர்!!
ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும், துபாய் பட்டத்து இளவரசரும் அங்குள்ள மாலில் சர்வ சாதாரணமாக நடந்து சென்று மக்களை சந்தித்து பேசிய காட்சிகள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மத்திய கிழக்கை உலுக்கி வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹமதான் பின் முகமது பின் ரஷித் ஆகியோர் துபாய் மாலில் சாதாரணமாக நடந்து சென்று மக்களுடன் உரையாடிய காட்சிகள் வைரலாகி உலக கவனத்தை ஈர்த்துள்ளன.
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'க்கு பதிலடியாக ஈரான், அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து வளைகுடா நாடுகளான UAE, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் உள்ளிட்டவை மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
UAE வான்பாதுகாப்பு அமைப்புகள் (பேட்ரியட், THAAD உள்ளிட்டவை) இதில் சிறப்பாக செயல்பட்டு நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்துள்ளன. UAE பாதுகாப்பு அமைச்சகம், 186 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 812 ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து பெரும்பாலானவற்றை அழித்ததாக அறிவித்துள்ளது. சில ஏவுகணைகள் தரையிறங்கி சிறிய சேதங்களை ஏற்படுத்தினாலும், உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளன.
இதையும் படிங்க: விறுவிறு அரசியல் களம்... நடிகை லதா EPS முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்..!!
رئيس الدولة يرافقه حمدان بن محمد في دبي مول مساء اليوم.
— Dubai Media Office (@DXBMediaOffice) March 2, 2026
لا تشلّون هم، فالإمارات آمنة ومطمئنة، وقيادتها بين أهلها وقريبة من شعبها. pic.twitter.com/gfgiIe5Bsu
இந்த பதற்றமான சூழலில், UAE தலைவர்களின் துபாய் மாலுக்கு சென்ற பொது நிகழ்வு மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய பாதுகாப்பு வளையம் இல்லாமல், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நடுவே சாதாரண உடையில் நடந்து சென்றனர்.
அதிபர் ஷேக் முகமது ஒரு சிறுமியை அருகில் அழைத்து அவள் கையை முத்தமிட்டு அன்போடு பேசினார். இருவரும் உணவகத்தில் அமர்ந்து காபி அருந்தினர், மக்களுடன் கை குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். துபாய் மீடியா ஆபிஸ் வெளியிட்ட வீடியோவில், "மக்களுக்கு அருகில்... தலைமை உறுதியாக" என்ற வாசகத்துடன் தேசபக்தி இசையுடன் இந்த காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.
இந்த செயல், UAE நாடு பாதுகாப்பானது, இயல்பு வாழ்க்கை தொடர்கிறது, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா பாதிக்கப்படவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்தாலும், UAE தனது ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, "தலைவர்களின் தைரியம்" என்று பாராட்டப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பீகார் அரசியலில் முக்கிய திருப்பம்..!! முதல்வர் பதவியிலிருந்து விலகல்..!! ராஜ்யசபா எம்.பியாகும் நிதிஷ் குமார்..!!