"முரட்டு அடிமை EPS"..!! அமைச்சர் சாமிநாதனை ஆதரித்து பரப்புரை செய்த உதயநிதி விளாசல்..!!
அமைச்சர் சாமிநாதனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார்கள். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பரப்புரை தீவிரமடைந்து உள்ளது.
திமுகவை பொருத்தவரை மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான சாமி நாதனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!
மேலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆன இந்திராணியை ஆதரித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை நடத்தினார். தனது பரப்புரையின் போது பேசிய அவர், அரசியலில் முரட்டு பக்தன், முரட்டுத் தொண்டன் இருக்கலாம் என்றும் ஆனால் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி எனவும் விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!