×
 

WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!

தமிழகத்தில் நடத்துள்ள பல்வேறு குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று சுமார் ஒரு மாத காலமே ஆகியுள்ள நிலையில், மக்கள் பிரச்சினைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

தவெக அரசு பதவியேற்ற பிறகு, கோயம்புத்தூர் சுலூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள், பல்வேறு கொலை வழக்குகள், இரட்டைக் கொலைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள், நான்கு இரட்டைக் கொலைகள் மற்றும் 19 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தமிழகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் ரசிகை பாலியல் வன்கொடுமை..! உண்மையாகவே அக்கறை இருக்கா முதல்வரே.? விளாசிய உதயநிதி..!

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் என்று முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share