அடுத்த வாரம் புதினை மீட் பண்ணுறேன்!! தேதி குறிச்சாச்சு!! ட்ரம்ப் அதிரடி! போர் நிறுத்தம் சாத்தியமா?
அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.
உக்ரைனில் நடந்து கொண்டிருக்கிற போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகள் தீவிரமா நடந்து வர்ற சூழல்ல, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அடுத்த வாரம் சந்திக்கப் போறதா அறிவிச்சிருக்காரு. ஆகஸ்ட் 15, 2025-ல அமெரிக்காவோட அலாஸ்காவில் இந்த சந்திப்பு நடக்கப் போகுதுன்னு டிரம்ப் தன்னோட ‘ட்ரூத் சோஷியல்’ தளத்துல அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காரு.
இந்த சந்திப்பு உலகமே ஆவலோட காத்திருக்கிற ஒரு முக்கியமான சந்திப்புன்னு அவரு குறிப்பிட்டிருக்காரு. இந்த பேச்சுவார்த்தையில உக்ரைனும் ரஷ்யாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்னு டிரம்ப் வலியுறுத்தியிருக்காரு.
2022 பிப்ரவரில ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிச்சதுல இருந்து, லட்சகணக்கான மக்கள் வீடு இல்லாம ஆகியிருக்காங்க, ஆயிரக்கணக்கானவங்க உயிரிழந்திருக்காங்க. இந்தப் போரை நிறுத்த முன்னாடி மூணு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த பயனும் இல்லாம தோல்வியில முடிஞ்சது. இந்த சூழல்ல, டிரம்ப்-புதின் சந்திப்பு ரொம்ப முக்கியமானதா பார்க்கப்படுது.
இதையும் படிங்க: நிலவை முதன்முதலில் சுற்றிவந்த சாகசக்காரர்!! வரலாறு படைத்த விண்வெளி வீரட் ஜிம் லவெல் மரணம்!!
இதுக்கு முன்னாடி 2021-ல ஜெனீவாவுல அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் புதினும் சந்திச்சாங்க. அதுக்கப்புறம் இப்போ தான் முதல் முறையா ரெண்டு நாட்டு அதிபர்களும் மறுபடியும் நேருக்கு நேர் சந்திக்கப் போறாங்க.
டிரம்ப், இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா இடையில சில பிரதேசங்களை பரிமாறிக்கிறதை உள்ளடக்கியிருக்கும்னு சொல்லியிருக்காரு, ஆனா இதுக்கு உக்ரைன் தரப்புல இருந்து கடுமையான எதிர்ப்பு இருக்கு. குறிப்பா, கிரிமியா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாதிரியான பகுதிகளை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க உக்ரைன் விரும்பல.
புதினோ, இந்தப் பகுதிகளை உக்ரைன் விட்டுக்கொடுக்கணும்னு நிபந்தனை விதிச்சிருக்காரு, மேலும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்யக் கூடாதுன்னும், நேட்டோவுல உக்ரைன் சேரக் கூடாதுன்னும் கோரிக்கை வச்சிருக்காரு.
டிரம்ப் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர தன்னால முடிஞ்சதை செய்வேன்னு சொல்லியிருக்காரு, ஆனா இவரோட அணுகுமுறை கொஞ்சம் முரண்பாடா இருக்கு. முன்னாடி, உக்ரைன் நேட்டோவுல சேர நினைச்சதுதான் ரஷ்யாவை ஆத்திரப்படுத்தி போருக்கு காரணம்னு டிரம்ப் சொல்லியிருந்தார். ஆனா, இப்போ ரஷ்யாவோட தாக்குதல்களை “வெறுக்கத்தக்கது”னு கண்டிச்சு, புதினுக்கு எதிரா கடுமையான பேச்சு வேற வச்சிருக்காரு.
இந்தியாவோட ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக 50% வரி விதிச்சு, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செஞ்சிருக்காரு. இந்தியாவும் இதை “நியாயமற்றது”னு விமர்சிச்சு, தன்னோட சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு தெளிவா சொல்லியிருக்கு.
இந்த சந்திப்பு நடக்குற இடமா அலாஸ்காவை தேர்ந்தெடுத்தது ஒரு முக்கியமான விஷயம். ஏன்னா, புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரன்ட் பிறப்பிச்சிருக்கு. அமெரிக்கா ICC உறுப்பு நாடு இல்லாததால, புதினுக்கு அலாஸ்காவுல பயணிக்க பிரச்னை இல்லை. முன்னாடி இந்த சந்திப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல நடக்கலாம்னு பேச்சு இருந்தது, ஆனா இப்போ அலாஸ்காவுல நடக்குது.
இந்த சந்திப்புக்கு முன்னாடி, டிரம்போட சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவுக்கு போய் புதினை சந்திச்சு பேசியிருக்காரு. இந்த சந்திப்பு ஒரு முன்னேற்றம்னு டிரம்ப் சொன்னாலும், இதுவரை பெரிய மாற்றங்கள் எதுவும் தெரியல. உக்ரைன் தரப்புல இருந்து, “நாங்க எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம், போரை தொடருவோம்”னு கடுமையான நிலைப்பாடு இருக்கு. இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரு தீர்வு கொண்டுவருமான்னு பார்க்க உலகமே ஆவலோட காத்திருக்கு.
இதையும் படிங்க: ட்ரம்பை எப்படி சமாளிக்கிறது! நேர்ல வாங்க பேசுவோம்! ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி போன்கால்!!