கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு திடீர் தடை! காலை வாரிய ரஷ்யா! இந்தியா கதி?!
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா திடீர் தடை விதித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவின் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமடைகிறது. சமீபத்தில் உக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்பு தளங்கள் மீது 'ட்ரோன்' தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், பாஷ்கோர்டோஸ்டான், சரடோவ், சமாரா, ரயாசான், கிரிஷி, வோல்கோகிராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய எண்ணெய் தளங்களை சேதப்படுத்தியுள்ளன.
ஆகஸ்ட் முதல் இதுவரை ரஷ்யாவின் 38 சுத்திகரிப்பு ஆலைகளில் 16 அளவுகளுக்கு ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 17-20 சதவீதம் வரை குறைந்துள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்கள், ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளன. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் கிரிமியா (உக்ரைன் மற்றும் ரஷ்யா கைப்பற்றிய பகுதி), விளாடிவோஸ்டாக், பார்ஈஸ்ட் உள்ளிட்ட பிராந்தியங்களில் பம்புகள் அரைக்கும் மேல் செயல்படாமல் உள்ளன.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தைக்கு புடின் ஆர்வம்?! என்ன ஆதாரம் இருக்கு! கிளம்பும் சர்ச்சை!
இதனால், எரிபொருள் விலைகள் வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளன. சான் பீட்டர்ஸ்பர்க் பொருளாதாரப் பரிமாற்று தரவுகளின்படி, A-95 பெட்ரோல் டன் ஒன்றுக்கு 82,300 ரூபிள்கள் (தோராயமாக £760 அல்லது $1,000) வரை உயர்ந்துள்ளது. இது ஜனவரி 2025-இல் இருந்த விலையை 54-55 சதவீதம் மீறியுள்ளது. டீசல் விலையும் அதேபோல் உயர்ந்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், உள்நாட்டு தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ரஷ்யா அரசு பெட்ரோலிய பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு 2025 இறுதிவரை தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. துணைப் பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக், "இது உள்நாட்டு சந்தையை நிலைப்படுத்தும். சேமித்திருக்கப்பட்ட நீதிகளால் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்தத் தடை, உலகளாவிய எரிபொருள் சந்தையை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரஷ்யாவின் டீசல் ஏற்றுமதி 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ளது.உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, "இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவின் போர் நிதியை பாதிக்கும்" எனக் கூறினார். ரஷ்யா, 361 ட்ரோன்களை அழித்ததாகக் கூறினாலும், உக்ரைன் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்த நெருக்கடி, ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேலும் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. உலகெங்கும் எண்ணெய் விலைகள் 2 சதவீதம் உயர்ந்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுகளில் இது புதிய அழுத்தமாக அமையலாம் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பேச்சுக்கும் தயார்! போருக்கும் தயார்!! உக்ரைனுக்கு கெடு விதித்தார் புடின்!!