×
 

நேட்டோவில் இணையப் போவதில்லை!! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி! முடிவுக்கு வருகிறதா போர்?!

மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளிடம் இருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதுவரை தீர்வு ஏற்படவில்லை. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறது. இது ரஷ்யாவுக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா அமைதி திட்டம்!! ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!! ஜெலன்ஸ்கி ஆதரவு!!

இந்தச் சூழலில், ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில், “உக்ரைனின் விருப்பம் நேட்டோவில் இணைவதுதான். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிடம் இருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

ஜெலன்ஸ்கி மேலும் கூறுகையில், “அமெரிக்கா - உக்ரைன் இடையேயான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள் ரஷ்யாவின் படையெடுப்பைத் தடுக்கும். உக்ரைன் அமைதியை விரும்புகிறது. ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கு உறுதியான உத்தரவாதங்கள் தேவை. 

உக்ரைன் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் போர் நீடிக்கிறது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான போர். உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு ரஷ்யா - உக்ரைன் போருக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சீன அதிபருடன் போனில் பேசிய ட்ரம்ப்!! முடிவானது முக்கிய ஒப்பந்தம்! ஜப்பானுக்கு வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share