ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் புரட்சி: 9 நாடுகளில் வெடித்தது பெரும் போராட்டம்!
விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக ஒன்பது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டங்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
வரலாறு காணாத கடுமையான விலைவாசி உயர்வு, வாடகை மற்றும் வீட்டுவசதி நெருக்கடி, கல்விக் கட்டண உயர்வு, கட்டுக்கடங்காத வேலையின்மை மற்றும் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்டித்துப் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 9 ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகல், பெல்ஜியம், ஆஸ்திரியா, அல்பேனியா, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய 9 நாடுகளின் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைநகரங்களில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களின் செயல்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மக்களின் வாங்கும் திறனை அடியோடு சீர்குலைத்துள்ள நிலையில், அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளான வீட்டு வாடகை, மின்கட்டணம் மற்றும் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தவறிய அந்தந்த நாட்டு அரசுகளுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் மோதல்கள் அரங்கேறி வருகின்றன.
இதையும் படிங்க: அரசியலில் பழக்கடை மூர்த்தி Sweet Uncle தான்: திமுக தலைமையை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!
கடந்த 2010-களில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய 'அரப் ஸ்பிரிங்' (Arab Spring) மக்கள் புரட்சியைப் போலவே, தற்போது ஐரோப்பிய கண்டம் முழுவதும் பொருளாதாரச் சீர்கேட்டிற்கு எதிராகப் பரவி வரும் இந்த எழுச்சி 'யூரோப் ஸ்பிரிங்' (Europe Spring) என்கிற புதிய மக்கள் புரட்சியாக உருவெடுத்துள்ளதா என்ற தீவிர விவாதம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!