×
 

தனக்கு ராக்கி கட்டிய 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வக்கிர மிருகம்... அடுத்தடுத்து செய்த கொடூரம்...!

உத்தரப்பிரதேசத்தில் தனக்கு ராக்கி காட்டிய 14 வயது உறவுக்கார சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தின் அவுரையாவைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர், தனக்கு ராக்கி கட்டிய 14 வயது சிறுமியை சில மணி நேரங்களிலேயே பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, தற்கொலை என்று காட்டுவதற்கான செட் அப் வேலைகளை எல்லாம் செய்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த சனிக்கிழமை காலை 33 வயதான சுர்ஜித் என்ற நபர் தனது மாமா வீட்டிற்குச் சென்ற போது, அங்கிருந்த 14 வயது சிறுமியான சகோதரி அவருக்கு ராக்கி கட்டியுள்ளார். இதையடுத்து அன்று இரவு மதுபானம் அருந்தியிருந்த சுர்ஜித் வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுர்ஜித், கொலையை தற்கொலையாக மாற்ற முடிவெடுத்துள்ளார்.

சிறுமியின் சடலத்தை தூக்கில் தொங்கியது போல அந்த அறையிலேயே செட் அப் செய்துவிட்டு தப்பியுள்ளார். ஆனால் இந்த சம்பவங்கள் எதுவும் அறியாத சிறுமியின் தந்தை பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் சிறுமியின் சடலத்தை பார்த்த தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். 

இதையும் படிங்க: பெண் ஊழியர்களிடம் டபுள் மீனிங் பேச்சு... வேளாண் இணை இயக்குநருக்கு வச்சாச்சு ஆப்பு...!

சிறுமியின் அறையில் பல இடங்களில் இரத்தக் கறைகளைக் கண்டவுடன் அது தற்கொலை அல்ல என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களை விசாரிக்கத் தொடங்கினர், சுர்ஜித் எப்போதும் அவர்களுடன் இருப்பதைக் கவனித்துள்ளனர். அதுமட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களிடம் கேள்விகள் கேட்கப்படும்போது, சுர்ஜித் அவர்களுக்குப் பதிலாக முந்திக்கொண்டு பதிலளித்து வந்தது அவர் மீது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. 

இதனிடையே சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து சுர்ஜித்தை காவலில் எடுக்க போலீசார் விசாரித்ததும், நடந்த அத்தனை உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share