×
 

திருநங்கைகளுக்குத் தடை: அதிபர் ட்ரம்ப் உத்தரவைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் முடிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவைத் தொடர்ந்து ராணுவத்தில் இனிமேல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனுமதியில்லை என்று அமெரிக்க ராணுவம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ராணுவ சேவையில் இருக்கும் வீரர்களுக்கும் பாலினத்தை உறுதிப்படுத்தும் முறையையும் நிறுத்தப்போவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில் “ அமெரிக்க ராணுவத்தில் இனிமேல் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபோதும் சேர்க்கப்படமாட்டார்கள், அவர்கள் சேவையாற்றவும் தடைவிதிக்கப்படும், சேவையில் இருப்போருக்கும் பாலின மாற்றுச் சேவை அளிப்பதும் நிறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் 27ம் தேதி கையொப்பமிட்ட உத்தரவில், திருநங்கைகள் ராணுவத்தில் பணியாற்றுவது குறித்து 30 நாட்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தார். அதிபர் ட்ரம்பின்  உத்தரவில் “ எந்த ஒரு பாலினத்துடன் பொருந்தாத பாலின அடையாளத்தை வெளிப்படுத்துவது, ராணுவ வீரரின் கெளரவமான, உண்மையான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறை மற்றும் அர்ப்பணிப்புடன் முரண்படுகிறது. அவ்வாறு மூன்றாம் பாலினத்தவர்களாக இருப்பவர்கள், ராணுவ சேவைக்குத் தேவையான கடுமையான தரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போப் ஆண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி; உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிப்பு 

ராணுவத்தில் பாலின மனச்சோர்வில் இருக்கும் வீரர்கள் மதிப்புடன் நடத்தப்படுவார்கள், தாமாக முன்வந்து சேவையாற்றுவதற்கு மதிப்பளிக்கப்படும், அதேசமயம், பாலினத்தை உறுதி செய்யும் சேவை காலவரையின்றி நிறுத்தப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என ராணுவம் தெரிவித்துள்ளது.நியூயார்க் கவர்னரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான கேதே ஹோச்சுல் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ இந்த உத்தரவு கொடூரமானது, சிறுபிள்ளைத்தனமானது.

எல்ஜிபிடிகியூ உரிமைகளுக்காக மூன்றாம் பாலினத்தவர்கல் போராடுகிறார்கள். இந்த பாகுபாட்டை நியூயார்க் ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக அதிபராக இருந்தபோதும், 2017 முதல் 2021 வரை ராணுவத்தில் திருநங்கைகள், மாற்றுப்பாலினத்தவர்கள் சேவையாற்றத் தடைவிதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு மசோதா: இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share