×
 

வெனிசுலா அதிபர் கைது விவகாரம்!! இன்று கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்! அதிகரிக்கும் பதற்றம்!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸையும் அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், நார்கோ-டெரரிசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜனவரி 3 ஆம் தேதி நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். மதுரோ தம்பதிகள் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்றும், வெனிசுலாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் அவை கூறுகின்றன. 

இதையும் படிங்க: வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இந்த நிகழ்வு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சர்வதேச சட்டங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், வெனிசுலா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் இன்று (ஜனவரி 5) நடைபெறவுள்ளது. கொலம்பியா மற்றும் வெனிசுலாவின் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்து சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கவுன்சிலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

அமெரிக்கா - வெனிசுலா இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்கள் இருமுறை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது மதுரோவின் கைது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதையும் படிங்க: வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share