×
 

அமெரிக்கா - ஈரான் மீண்டும் மோதல்! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!! போர் பதற்றம்!

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் போர் பதற்றம் துவங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்கள், சர்வதேச அரசியல் மற்றும் உலக வர்த்தக வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

நீண்டகால பதற்றத்துக்குப் பிறகு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்கா மற்றும் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதையடுத்து, உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னர் சர்வதேச சரக்கு கப்பல்களின் போக்குவரத்தும் வழக்கம்போல் மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது அமைதி ஒப்பந்தத்தின் உணர்வுக்கு எதிரான செயல் என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: தடலாடியாக சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! 4 மாதத்தில் இல்லாத இறக்கம்! உலக நாடுகள் மகிழ்ச்சி!

இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு இரு தரப்பும் நேரடியாக தாக்குதல் நடத்திய முதல் சம்பவம் இதுவாகக் கருதப்படுகிறது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக இருப்பதால், அங்கு மீண்டும் மோதல் தீவிரமடைந்தால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, கப்பல் போக்குவரத்து மற்றும் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா - ஈரான் இடையேயான இந்த புதிய பதற்றம் உலக நாடுகளின் கவனத்தை மீண்டும் மத்திய கிழக்கு நோக்கி திருப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share