×
 

சும்மா இறங்கி அடிங்க.. இந்தியாவுக்கு ஃபுல் சப்போர்ட்.. ரஷ்யா, ஜப்பான் வரிசையில் அமெரிக்கா..!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவை அளிப்பதாக அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் மைக் ஜான்சன் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா, ஜப்பான் நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவை அளிப்பதாக அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் மைக் ஜான்சன் உறுதியளித்தார். இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளை ஆதரிக்க அனைத்தையும் செய்வோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு முழு ஆதரவை வழங்கும். இந்தியாவுடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானவை. அதனை தொடர எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்.

இதையும் படிங்க: பாக். கதி அம்பேல்..! இந்தியாவை அசைச்சுக்க முடியாது..! அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வு..!

இந்திய நாட்டுடனான உறவின் முக்கியத்துவத்தை டிரம்ப் நிர்வாகம் தெளிவாகப் புரிந்து கொள்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தலின் முக்கியத்துவத்தை தெளிவாகப் புரிந்துகொள்கிறது என்று அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்து உள்ளார். முன்னதாக நேற்று கிழக்காசிய நாடான ஜப்பானின் ராணுவ அமைச்சர் ஜெனரல் நகதானி, அரசு முறைப் பயணமாக நம் நாட்டிற்கு நேற்று வந்தார். டில்லியில் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், இரு தரப்பு உறவு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய அமைதிக்கு பங்களிப்பது பற்றியும் இருவரும் விவாதித்தனர். இதேபோல், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ பயிற்சிகளை அதிகரிக்க செய்வது, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர். அப்போது நகாடானி கூறியதாவது, “இந்தியாவும் ஜப்பானும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். சர்வதேச, பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை ஜப்பான் மிக வன்மையாக கண்டிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஜப்பான் முழுஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் புதின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள், அதன் பின்னணியில் இருப்பவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று புதின் வளியுறுத்தினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் விரும்பினால் ரஷ்யா சமரசத்தில் ஈடுபட தயாராக இருக்கிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! சுத்துப்போட்ட ராணுவம்.. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share