×
 

ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

ஈரான் கொடுத்த பதிலடியினாலும், விபத்துக்களினாலும் 39 விமானங்கள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ போரில், அமெரிக்கா பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

போர் தொடங்கி கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகும் நிலையில், அமெரிக்கா இதுவரை 39 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் மட்டும் 24 ரீப்பர் ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் 8 ட்ரோன்கள் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ஒரு ரீப்பர் ட்ரோனின் விலை சுமார் 279 கோடி ரூபாய் ஆகும்.

ஈரானிய தாக்குதலில் ஒரு எப்-15ஈ ரக போர் விமானமும், குவைத் தவறுதலாக சுட்டு வீழ்த்திய 3 எப்-15ஈ விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 எப்-15ஈ விமானங்கள் இழக்கப்பட்டுள்ளன. ஈரான் தாக்குதலில் சிக்கிய ஏ-10 வார்த்ஹாக் விமானம் ஒன்று குவைத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சேதமடைந்தது. 

இதையும் படிங்க: பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

கே.சி.-135 எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கில் விழுந்து நொறுங்கியதில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். சவுதியின் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இ-3 விமானம் ஒன்று முழுமையாக அழிக்கப்பட்டது.

மீட்புப் பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஈரானிய பகுதியில் அமெரிக்காவே இரு சி-130 ரக விமானங்களை வெடிக்கச் செய்தது. இந்தப் போரில் அமெரிக்காவுக்கு மொத்தம் 18,600 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 13 வீரர்களை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் இந்தப் பெரும் இழப்பு உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் கொடுத்த பதிலடியும், சில விபத்துகளும் சேர்ந்து அமெரிக்காவுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இழப்புகள் அமெரிக்க இராணுவத்தின் வான் பலத்தை பாதித்துள்ளதாக அரசியல் மற்றும் இராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். போர் நிறுத்தம் இருந்தாலும், இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: தரைவழி தாக்குதல் தேவையே படாது!! ஈரானை ஈசியா ஜெயிச்சிருவோம்!! அமெரிக்க அமைச்சர் அசால்ட் பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share