×
 

தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. தூக்கி வீசப்பட்ட விமானி.. பாதுகாப்பானதா F-35!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விமானப்படை தளத்தில், 5ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லெமூர் கடற்படை விமானத் தளத்துக்கு (NAS Lemoore) அருகே, 5-ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான F-35C ஒரு பயிற்சி விமானமாக பறந்து கொண்டிருந்தபோது, ஜூலை 30, 2025 அன்று மாலை 4:30 மணியளவில் தரையில் விழுந்து நொறுங்கியிருக்கு. இந்த விபத்தில் விமானியான பைலட், விமானத்தின் காக்பிட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு (ejected) பத்திரமாக தரையிறங்கினாரு. 

அவரு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்காரு, அவரோட உயிருக்கு ஆபத்து இல்லைன்னு அதிகாரிகள் சொல்றாங்க. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்துட்டு இருக்கு, ஆனா விமானத்தோட சேதம் பத்தி இன்னும் முழு விவரம் வெளியாகல. இந்த சம்பவம், உலகின் மிக மேம்பட்ட போர் விமானம்னு புகழப்படுற F-35-ஓட பாதுகாப்பு அம்சங்கள் மீது பெரிய கேள்விகளை எழுப்பியிருக்கு.

F-35, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 5-ம் தலைமுறை ஸ்டெல்த் விமானம். இது வான்வெளி ஆதிக்கம், தரைத் தாக்குதல், மின்னணு போர் மாதிரி பல திறன்களை உள்ளடக்கிய ஒரு மல்டி-ரோல் விமானம். ஆனா, இந்த விமானத்தோட பாதுகாப்பு பதிவுகள் சமீப காலமா சந்தேகத்துக்கு உள்ளாகியிருக்கு. இந்த ஆண்டு மட்டும் இது மூணாவது F-35 விபத்து. 

இதையும் படிங்க: இந்திய ஜிடிபி மீது இடியை இறக்கிய ட்ரம்ப்!! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு விளக்கம்..!

மே 2024-ல நியூ மெக்ஸிகோவில் ஒரு F-35B விபத்து, ஜனவரி 2025-ல அலாஸ்காவில் ஒரு F-35A விபத்து, இப்போ கலிபோர்னியாவில் இந்த F-35C விபத்து. இதுக்கு முன்னாடி 2023-ல சவுத் கரோலினாவில் ஒரு F-35B விமானி தவறுதலா வெளியேறியதால், விமானம் 11 நிமிஷம் தன்னிச்சையா பறந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவங்கள் F-35-ஓட நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியிருக்கு.

இதே மாதிரி, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14, 2025-ல ஒரு பிரிட்டிஷ் ராயல் நேவி F-35B விமானம், மோசமான வானிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமா அவசரமா தரையிறங்கி, ஒரு மாசத்துக்கு மேல பழுது காரணமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த சம்பவம், இந்தியாவில் மீம்ஸ், ஜோக்ஸ்னு வைரலானது. கேரளா டூரிஸம் டிபார்ட்மென்ட் கூட, “கடவுளின் நாட்டை விட்டு விமானம் கிளம்ப மனசு இல்லாம இருக்கு”னு ஒரு AI படத்தோடு கலாய்ச்சது. இந்த விமானம், பிரிட்டிஷ் பொறியாளர்கள் வந்து பழுது பார்த்து, ஜூலை 23-ல ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிச்சு. ஆனா, இந்த சம்பவம் F-35-ஓட தொழில்நுட்ப நம்பகத்தன்மை மீது பெரிய கேள்விகளை எழுப்பியது.

F-35 விமானங்களோட விபத்து வரலாறு பார்க்கும்போது, பைலட் தவறு, தொழில்நுட்ப கோளாறு, மென்பொருள் பிரச்னைகள், கடுமையான வானிலை மாதிரி பல காரணங்கள் வெளிப்பட்டிருக்கு. 2018-ல ஒரு F-35B விபத்துக்கு காரணம், எரிபொருள் குழாய் கோளாறு. 2020-ல ஒரு விமானத்துக்கு ஆக்ஸிஜன் சிஸ்டம் பிரச்னை, பைலட் சோர்வு, ஹெல்மெட் டிஸ்பிளே கோளாறு காரணமா விபத்து நடந்தது. இந்த விபத்துகளுக்கு பிறகு, முழு F-35 குழுவையும் ஆய்வு செய்ய அமெரிக்கா உத்தரவு போட்டது. 

ஆனாலும், இந்த விமானத்தோட பராமரிப்பு செலவு, தொழில்நுட்ப சிக்கல்கள், மிஷன் தயார்நிலை குறைவு மாதிரி பிரச்னைகள் தொடர்ந்து விமர்சிக்கப்படுது. ஒரு F-35 விமானத்தோட விலை சுமார் 100 மில்லியன் டாலர்கள், ஆனா இந்த விபத்துகள் உலகளவில் இந்த விமானத்தோட நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துது.

இந்தியாவுக்கு இந்த சம்பவங்கள் முக்கியமானவை, ஏன்னா இந்திய விமானப்படையும் எதிர்காலத்துல இந்த மாதிரி மேம்பட்ட விமானங்களை வாங்குறத பத்தி யோசிக்குது. F-35-ஓட பாதுகாப்பு அம்சங்கள், குறிப்பா மார்ட்டின்-பேக்கர் US16E எஜெக்ஷன் சீட், பைலட்டை பாதுகாக்க உதவுது, ஆனா தொடர்ச்சியான விபத்துகள், தொழில்நுட்ப கோளாறுகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையா இருக்கு. 

இப்போ கலிபோர்னியா விபத்துக்கு அமெரிக்க கடற்படை முழு விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்கு. இந்த விசாரணை, F-35-ஓட பாதுகாப்பு மேம்பாட்டுக்கு வழிவகுக்குமா, இல்ல இந்த விமானத்தோட நம்பகத்தன்மை மீதான சந்தேகத்தை இன்னும் அதிகரிக்குமான்னு பார்க்க வேண்டியிருக்கு.

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா வர்த்தகம்.. இந்தியாவை வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share