×
 

“நரகக்குழி”... இந்தியாவின் கோபத்திற்கு ஆளான டிரம்ப்... மோடி பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

இந்த நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், இந்தியாவின் கோபத்தை தணிக்கவும் அமெரிக்கத் தூதரகம் இந்தியாவையும் புது தில்லியின் தலைமையையும் பாராட்டியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை 'நரகக் குழி' என்று வர்ணித்த ஒரு பாட்காஸ்ட்டை மீண்டும் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சர்ச்சை வெடித்துள்ளது. டிரம்பின் கருத்துக்களுக்கு இந்தியா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், இந்தியாவின் கோபத்தை தணிக்கவும் அமெரிக்கத் தூதரகம் இந்தியாவையும் புது தில்லியின் தலைமையையும் பாராட்டியுள்ளது. 

அமெரிக்க வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் தனது பாட்காஸ்டில் இந்தியாவையும் சீனாவையும் சாக்கடைகள் என்று வர்ணித்தார். அதனை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் டிரம்ப், அதை  மறுபதிவு செய்தபோது ஒரு சர்ச்சை எழுந்தது. அமெரிக்காவில் பிறப்புரிமைக் குடியுரிமையை எதிர்த்து, சாவேஜ் இந்தியாவையும் சீனாவையும் "நரகக் குழிகள்" என்று வர்ணித்தார். இந்தப் பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் பிறந்ததால் வெளிநாட்டுக் குழந்தைகளுக்குத் தானாகவே பிறப்புரிமைக் குடியுரிமை வழங்குவதை டிரம்ப் ஏற்கனவே எதிர்த்து வருகிறார். டிரம்பின் இந்த முடிவை அமெரிக்க நீதிமன்றங்கள் தடுத்துவிட்டன. இதனால், அவர் நீதிமன்றங்கள் மீதும் கோபமாக இருக்கிறார். இதுபோன்ற ஒரு நேரத்தில் டிரம்ப் இந்த பாட்காஸ்டை மறுபதிவு செய்ததற்கு சாவேஜ் அதிருப்தி தெரிவித்தார். இருப்பினும், அவர் டிரம்பை நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை.

டிரம்ப் பதிவிட்ட பாட்காஸ்ட் உள்ளடக்கத்திற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், "நாங்கள் சில அறிக்கைகளைப் பார்த்தோம். அதைப் பற்றி என்னால் அவ்வளவுதான் கூற முடியும்" என்றார். பின்னர், அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், டிரம்ப், "இந்தியா ஒரு சிறந்த நாடு, அதன் தலைமைப் பொறுப்பில் எனக்கு ஒரு மிக நல்ல நண்பர் இருக்கிறார்" என்று கூறியதாகத் தெளிவுபடுத்தினார். டிரம்பின் கருத்துக்களுக்குப் பிறகு வெடித்த கோபத்தைத் தணிக்கும் முயற்சியில், அவர் இந்தியாவை ஒரு சிறந்த நாடு என்றும் நெருங்கிய கூட்டாளி என்றும் அழைத்தார். இதன் மூலம், சர்ச்சை தணிந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: “கண்ணில் படும் எந்தக் கப்பலையும் எரித்துவிடுங்கள்”... அமெரிக்கக் கடற்படைக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு...!

இதையும் படிங்க: “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share