×
 

“அந்த பேச்சுக்கே இடமில்ல” கடைசி வார்னிங் கொடுத்த டிரம்ப் - இந்தியா கொடுத்த தரமான பதிலடி...!

இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்ற தனது எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாட்டை ஏற்காத நாடுகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் பரஸ்பர வரிவிதிப்பு முறை அமலுக்கு வரும்; இறுதித் தேதியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவுக்கு சவால் விட்ட டிரம்ப்: 

பிரிக்ஸ் குழு அமெரிக்க டாலரை பலவீனப்படுத்த பாடுபடுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​டிரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார், "பிரிக்ஸ் நாடுகளுக்கு  விரைவில் 10 சதவீத வரி வசூலிக்கப்படும்" என்று கூறினார். அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க வர்த்தக கூட்டாளி மற்றும் பிரிக்ஸ் உறுப்பினர் என்ற இந்தியாவிற்கு ஏதாவது சலுகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதையும் படிங்க: பைக் மீது லோடு வேன் மோதிய கோர விபத்தில் பெண் பலி... பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்.

 

ஆனால் அதனை முற்றிலும் மறுத்த டிரம்ப், எந்த நாட்டிற்கும் எந்த விதிவிலக்குகளும் கிடையாது என உறுதியாக தெரிவித்துள்ளார். பிரிக்ஸில் இந்தியா உறுப்பினராக இருப்பதால், முழு கூட்டமைப்பிற்கும் திட்டமிடப்பட்ட அதே கூடுதல் 10% கட்டணங்களுக்கு அது உட்பட்டது என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ளார். பிரிக்ஸ் டாலரை சீரழிக்க உருவாக்கப்பட்டது என குற்றச்சாட்டிய டிரம்ப், அதில் இருப்பதால் இந்தியாவும் வரி விதிப்பில் இருந்து தப்ப முடியாது என்றார். 

இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்? 

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்பும் நேரத்தில் டிரம்பின் எச்சரிக்கை வந்துள்ளது.

14 நாடுகளுக்கு வரி விதிப்பு கடிதங்களை வழங்கிய அதே தருணத்தில், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். 

இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  இந்தியாவுக்கு வருகை தரும் போது பிரதமர் நரேந்திர மோடி இடையே இறுதி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் கண்மூடித்தனமான வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இந்தியா கையெழுத்திடவில்லை என சொல்லப்பட்டது.

இதனால் கெடு முடியப் போகும் நிலையில் என்ன செய்வார் ட்ரம்ப் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் அவகாசத்தை ஆகஸ்ட்-க்கு நீட்டித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக சென்ற அதிகாரிகள், டிரம்பின் 10 சதவீத வரி விதிப்பு அறிவிப்பால் அதிருப்தி ஏற்பட்டு இம்மாத தொடக்கத்தில் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: UK-வில் 33% பிறப்பு குறைபாடுகளுக்கு பாகிஸ்தானியர்களே காரணம்..! பகீர் கிளப்பிய பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share