×
 

அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

அமெரிக்கா சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அடுத்த மாதம் தன் இந்திய பயணத்தை உறுதி செய்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அடுத்த மாதம் இந்தியா வருகை தருவார் என உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியை அமெரிக்காவில் சந்தித்த போது இந்த அறிவிப்பு வெளியானது.

மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் விக்ரம் மிஸ்ரி, அங்கு ராணுவ மற்றும் வர்த்தக அதிகாரிகளை சந்தித்து இரு நாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விவகாரங்களில் கவனம் செலுத்தினார். நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நேரில் சந்தித்தார்.

இந்த முக்கிய சந்திப்பில் வர்த்தகம், அரிய வகை கனிமங்கள் (கிரிட்டிகல் மினரல்ஸ்), பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-அமெரிக்கா-ஆஸ்திரேலியா-ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பான ‘குவாட்’ (QUAD) உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: ட்ரம்ப் - மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்பு?! திட்டவட்டமாக மறுக்கும் வெளியுறவுத்துறை!!

சந்திப்புக்குப் பிறகு மார்கோ ரூபியோ, அடுத்த மாதம் இந்தியா வருவதாக உறுதியளித்தார். இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டோ மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அலிசன் ஹூக்கர் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளில் இருதரப்பு முன்னுரிமைகள், உலகளாவிய நிலைமைகள் மற்றும் மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மார்கோ ரூபியோவின் இந்தியப் பயணம் இரு நாட்டு உறவுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share