அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்! டிரம்பின் கெடுவை நிராகரித்து ஈரான் கடும் எச்சரிக்கை!
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க டிரம்ப் விதித்த 48 மணிநேர கெடுவை நாங்கள் நிராகரித்து விட்டோம். அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாவது வாரமாகத் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 48 மணிநேரக் கெடுவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துத் தடையின்றி நடைபெற வேண்டும் என்றும், அதற்கு ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் டிரம்ப் 48 மணிநேரக் கெடு விதித்திருந்தார். ஆனால், இதனை அலட்சியப்படுத்திய ஈரான், "அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்" என மிகக்கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அதிபர் டிரம்ப் தற்போது மிகுந்த பதட்டத்திலும், என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலையிலும் (Desperate) இருப்பதாக விமர்சித்துள்ளது. ஈரானின் ராணுவக் கட்டமைப்பை முற்றிலும் சிதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறி வந்தாலும், ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் அமெரிக்காவின் வான் அதிகாரத்திற்கே சவால் விடுப்பதாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்த ஈரான்... அசிங்கப்பட்ட டிரம்ப்... உலகிற்கே வெட்ட வெளிச்சமான உண்மை...!
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகின்றன. இதனை ஈரான் முடக்கினால், உலக அளவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) மற்றும் ஏ-10 (A-10) ஆகிய இரு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் ராணுவச் சவாலாக மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் எதிரி நாட்டுத் தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் வீழ்ந்தது இதுவே முதல்முறை என்பதால், ஈரானை வீழ்த்துவது டிரம்பிற்கு அவ்வளவு எளிதான காரியமாகத் தெரியவில்லை.
டிரம்பின் கெடு முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா நேரடி ராணுவ நடவடிக்கையில் இறங்குமா அல்லது ஈரான் தனது பிடியைத் தளர்த்துமா என்பது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: என்னது..!! தங்க நாணயத்தில் டிரம்ப் உருவமா..?? தீவிரம் காட்டும் அமெரிக்க அரசு.. வெடித்தது புதிய சர்ச்சை..!!