×
 

அம்மாடியோவ்.. ஆடம்பரமாக நடந்த அமேசான் நிறுவனர் திருமணம்! மலைக்க வைக்கும் செலவு கணக்கு!!

55 வயதான லாரன் சான்செஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இத்தாலியின் வெனிஸ் நகரில் ஜூன் 27ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

உலகின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் Jeff Bezos. வயது 61. உலக பணக்காரர்கள் பட்டியலில் அவருக்கும் ஒரு இடம் இருக்கிறது. அவருடைய இன்றைய சொத்து மதிப்பு 18.45 லட்சம் கோடி ரூபாய் (220.9 பில்லியன் டாலர்)

பெசோஸின் முதல் திருமணம் 1993ல் மெக்கன்சி ஸ்காட் என்பவருடன் நடந்தது. 25 ஆண்டு திருமண வாழ்வு இருவருக்கும் கசந்ததை அடுத்து 2019ல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்காக பெசோஸ் 2.97 லட்சம் கோடி ரூபாய்(35.6 பில்லியன் டாலர்) மதிப்புள்ள அமேசான் பங்குகளைப் பெற்றார்.விவாகரத்துக்கு முன்பே பெசோஸ் பிரபல பத்திரிகையாளர் மற்றும் டிவி தொகுப்பாளரான லாரன் சான்செஸ் உடன் டேட்டிங்கில் இருந்தார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை.. அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..!

மெக்கன்சியை விவாகரத்து செய்த பிறகு அவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பிய அமேசான் நிறுவனர் பெசோஸ், 2023ல் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்துக்கான சட்டப்பூர்வ ஒப்பந்தமும் செய்துகொண்டார்.

இந்த நிலையில் 55 வயதான லாரன் சான்செஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இத்தாலியின் வெனிஸ் நகரில் ஜூன் 27ம் தேதி திருமணம் செய்துகொண்டார். 3 நாள் இதற்காக நடந்த தடபுடல் மற்றும் பிரமாண்ட திருமணத்துக்கு சுமார் 480 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அமேசான் நிறுவனர் அமெரிக்க அதிபருக்கு அழைப்பு கொடுத்திருந்தார். ஆனால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளால் டிரம்ப் பங்கேற்கவில்லை.  

ஆனால் அவருடைய மகள் இவாங்கா டிரம்ப், அவருடைய கணவர் ஜாரெட் குஷ்னர், அமெரிக்காவின் முன்னாள் கால்பந்து வீரர் டாம் பிராடி, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே, பிரபல அமெரிக்க பாடகர் உஷர் உள்பட பல பிரபலங்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்

இதையும் படிங்க: மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share