×
 

இந்த அவமானம் தேவையா? பாக். பிரதமர் பேச்சுக்கு மெலானி கொடுத்த REACTION!

மெலானி மட்டும் அல்ல. அவருக்கு பக்கத்தில் நின்ற பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உட்பட மற்ற தலைவர்களும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், டிரம்புக்கு உருக உருக ஐஸ் வைப்பதை பார்த்து உள்ளுக்குள்ளே நக்கலாக சிரித்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான இரண்டு ஆண்டுகள் நீடித்த கடுமையான போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தார், எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, காசாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க எகிப்தின் சர்ம் எல்-ஷேக் நகரில் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில், பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் டிரம்பின் பேச்சும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பின் புகழ்ச்சியும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலானியின் வியப்பு ரியாக்ஷனும் சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளன.

இதையும் படிங்க: மோடி என்னோட பெஸ்ட் ப்ரண்ட்! இந்தியா சிறந்த நாடு! ஐஸ் மழை பொழியும் ட்ரம்ப்!

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸின் தாக்குதலுடன் தொடங்கிய போர், காசாவில் 67,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. டிரம்பின் 20 அம்ச திட்டத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. உச்சி மாநாட்டில், ஹமாஸ் 20 உயிருடன் இருக்கும் இஸ்ரேல் பிணையாளர்களை விடுவித்தது, இஸ்ரேல் 1,968 பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை விடுதலை செய்தது. 

காசாவின் மீளமைப்பு, ஹமாஸ் ஆயுத ஒழிப்பு, பாலஸ்தீனிய ஆட்சி உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிசி, கத்தார் அமீர் ஷேக் தமீம், துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்தியாவை சார்பாக மத்திய அமைச்சர் கிர்தி வர்த்தன் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய டிரம்ப், "இப்போது எல்லா போர்களையும் நான் நிறுத்தினேன்" என்று பெருமையுடன் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை "என் சிறந்த நண்பர்" என்று புகழ்ந்தார். 

"இந்தியா சிறந்த நாடு, மோடி அற்புதமான வேலை செய்துள்ளார்" எனவும், "இந்தியா-பாகிஸ்தான் மிக நன்றாக வாழ்ப்போகும்" எனவும் கூறினார். பின்னணியில் நின்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பைப் பார்த்து, "அப்படித்தானே?" என்று கேட்டார். ஷரீப்பை "இந்தியா-பாக் அணு மோதலை தடுத்த சிறந்த தலைவர்" என்று பாராட்டினார்.

டிரம்ப் பேச்சை முடித்து, "பாகிஸ்தான் பிரதமர் வாருங்கள், பேசுங்கள்" என்று சட்டென அழைத்தார். ஒருவித பதற்றத்துடன் மேடைக்கு வந்த ஷரீப், "டிரம்ப் இந்தியா-பாக் போரை நிறுத்தி, அணு ஆயுத பேரழிவை தடுத்து பல லட்சம் உயிர்களை காப்பாற்றினார். 

இப்போது காசாவிலும் அமைதியை கொண்டு வந்து, அமைதியின் மனிதர் என்று நான் அழைக்கிறேன். அடுத்த ஆண்டு நிச்சயம் அவருக்கு நோபல் அமைதி பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்" என்று உருகி பேசினார். இது டிரம்பின் "வாவ், எதிர்பார்க்கவில்லை" என்ற பதிலையும் ஏற்படுத்தியது.

ஷரீப்பின் புகழ்ச்சியை கேட்டு, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலானி வாயில் விரல்களை வைத்து வியப்புடன் நின்றார். அவரது சிரிப்பை அடக்க முடியாத ரியாக்ஷன், சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. "என்னடா இந்த மனுஷன் கூச்சமின்றி டிரம்பை அள்ளி விடுறாரு" என்று போல் தெரிந்த அந்த வியப்பு, நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளது. 

மெலானி "ரியாக்ஷன் குயின்" என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு அருகில் நின்ற பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட தலைவர்களும் உள்ளுக்குள் சிரித்ததாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த ரியாக்ஷன், உச்சி மாநாட்டின் சரியான அமைதி விவாதத்தை விட டிரெண்டிங் ஆகியுள்ளது.

இந்த மாநாடு, காசாவின் போஸ்ட்-வார் மீளமைப்பு, பாலஸ்தீனிய ஆட்சி, இஸ்ரேல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை விவாதித்தது. டிரம்பின் முயற்சி, உலக தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால், ஹமாஸ் ஆட்சி முடிவு, இஸ்ரேல் ராணுவம் வாபஸ் போன்ற சவால்கள் தொடர்கின்றன. இந்த நிகழ்வு, சர்வதேச அரசியலில் டிரம்பின் "பீஸ்மேக்கர்" இமேஜை வலுப்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: நோபல் கிடைக்காட்டி என்ன இப்போ? அதவிட பெரிசா ஒண்ணு கிடைச்சிருக்கு! பொடி வைக்கும் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share