×
 

#BREAKING: இரு நாட்டு பிரதமர்களின் விவேகத்தை பாராட்டுகிறேன்..! போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மகிழ்ச்சி..!

இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் இந்தியா பாகிஸ்தான் இடையே உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. நீங்க பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மாலை 5 மணி முதல் போர் தொடர்பான நடவடிக்கைகள் முழுவதுமாக நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிய வேண்டும் என்பதற்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். நடுநிலையான இடத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவதாகவும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்ற கூறியுள்ளார். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம், அரசியல் திறமைக்கு பாராட்டுகளை கூறுவதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்கா அனுப்பிய மெசேஜ்... நாடு முழுவதும் பீதி... அழிவை தானே தேடிக்கொண்ட பாகிஸ்தான்..!

இதையும் படிங்க: ‘மேக் இன் இந்தியா’வை மேம்படுத்தும் ஆப்பிள்.. அமெரிக்காவில் விற்கப்போகும் இந்தியா மேட் ஐ-போன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share