×
 

காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடும் தாமிரபரணி தண்ணீர்... மூழ்கும் நிலையில் முருகன் கோவில்...!

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சற்று மழை பொழிவு அதிகமாக இருந்தாலும் இடையில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மோன்தா புயல் உருவாக்கிய போது பெய்த மழை படிப்படியாக குறைந்தது. 

தற்போது மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மீனவ நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வளைகுடா, குமரிக்கடலில் அறுபது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. தென்காசி, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை... வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு...!

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோவில் முழுவதுமே நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குறித்து ஐந்தாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மக்களே உஷார்... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் வார்னிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share