×
 

19 நாடுகளின் குடிமக்களுக்கு நிரந்தரத் தடை... டிரம்ப் அறிவித்துள்ள மூன்றாம் உலக நாடுகள் எவை? 

மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் குடியேற்றத்தை நிரந்தரமாக தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

நவம்பர் 26ம் தேதி வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு வீரர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் சந்தேக நபரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் கைது செய்யப்பட்டார். கடந்த காலங்களில் குடியேற்றம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகமும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சந்தேக நபர் ஆப்கானிய நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட உடனேயே, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அந்த நாட்டின் குடிமக்களுக்கான விண்ணப்பங்களை செயலாக்குவதை காலவரையின்றி நிறுத்தி வைத்தன. "எங்கள் நாட்டின் மற்றும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புதான் எங்கள் ஒரே குறிக்கோள்" என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், குடியேற்றக் கொள்கைகள் அந்த வளர்ச்சியை சேதப்படுத்தியுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்கு தீர்வு மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் குடியேற்றத்தை நிறுத்துவதாகும் என்றும், அப்போதுதான் அமெரிக்க அமைப்பு முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் டிரம்ப் கூறினார். மேலும், ஜோ பைடன் காலத்தில் அனுமதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான குடியேற்றங்களை ரத்து செய்ய விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

மேற்கத்திய நாகரிகத்திற்கு பொருந்தாத எந்தவொரு வெளிநாட்டு குடிமகனும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், டிரம்ப் குறிப்பிட்ட மூன்றாம் உலக நாடுகள் குறித்து இப்போது ஒரு பெரும் விவாதம் வெடித்துள்ளது. மூன்றாம் உலக நாடுகள் என்ற சொல் எப்படி வந்தது? அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அந்த நாடுகள் எவை? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்... 

இதையும் படிங்க: கண்கள் சிவந்த டிரம்ப்... இந்த நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற நிரந்தர தடை... உலக நாடுகள் அதிர்ச்சி...! 

1960களுக்குத் திரும்ப வேண்டும். அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அப்போதுதான் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் என்ற கருத்து உருவானது. 

அப்போது உலக நாடுகள் அமெரிக்காவின் பக்கத்தில் மேற்கத்திய கூட்டணியாகவும், சோவிய ரஷ்யாவின் பக்கத்தில் கம்யூனிஸ்ட் நாடுகளாகவும் அணி பிரிந்தன. இந்த இரண்டு பக்கமும் சேராமல் நடுநிலையாக நின்ற நாடுகள் மூன்றாம் உலக நாடுகளாக பிரிக்கப்பட்டன. ஏழை அல்லது 'வளர்ச்சியடையாத' நாடுகளைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூன்றாம் உலகம் என்ற சொல் மறைந்துவிட்டது என்று நம்பப்பட்ட நிலையில், டிரம்ப் மீண்டும் அந்த வார்த்தையை பயன்படுத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

முதல் உலக நாடுகள் எவை? 

அமெரிக்காவுடன் ஜனநாயகம் மற்றும் தொழில் ரீதியாக கூட்டணி சேர்ந்த நாடுகள் முதல் உலக நாடுகளாகும். வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, அயர்லாந்து மற்றும் பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் அடங்கும். 

இரண்டாம் உலக நாடுகள் எவை? 

இரண்டாம் உலகம் சோவியத் குடியரசுகள், போலந்து, ஜெர்மனி, யூகோஸ்லாவியா மற்றும் பால்கன் நாடுகளையும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் உள்ளடக்கியது. ஆசியாவில், சீனா, மங்கோலியா, வட கொரியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற கம்யூனிச நாடுகள் கருதப்பட்டன. 

மூன்றாம் உலக நாடுகள் எவை? 

மூன்றாம் உலகம் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளர்ச்சியடையாத, முக்கியமாக விவசாய நாடுகளை உள்ளடக்கியது.

எந்தெந்த நாடுகளுக்கு தடை விதிப்பு? 

நவம்பர் 28ம் தேதி முதல் டிரம்ப் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் மற்றும் 18 நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொரு நிரந்தர குடியிருப்பாளர் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவரின் குடியேற்ற நிலையை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது. 

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ-பிரஸ்ஸாவில், ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகியவை அடங்கும். கூடுதலாக, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிரம்ப்-மம்தானி சந்திப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சசி தரூர்... காங்கிரஸுக்கு விழுந்த சம்மட்டி அடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share