×
 
☰

இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்! இலங்கை அதிபர் திசாநாயக்க உறுதி!

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்போ, வான்வெளியோ பயன்படுத்தப்பட மாட்டாது என அந்நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்பையோ அல்லது வான்வெளியையோ எந்தவொரு சக்தியும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வெளியுறவுக் கொள்கை குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, பிராந்திய அமைதி மற்றும் அண்டை நாட்டுடனான நல்லுறவுக்குத் தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்போ அல்லது வான்வெளியோ பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. எனது தலைமையிலான அரசு நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றும். உலக அரங்கில் எந்தவொரு ராணுவ மோதலிலும் இலங்கை ஒருபோதும் பங்கேற்காது என்று ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி.. இந்தியாவில் குறையுமா பெட்ரோல், டீசல் விலை?

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி நிலவி வரும் சூழலில், சீனாவின் ஆதிக்கம் மற்றும் உளவு கப்பல்களின் வருகை குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தது. இந்தச் சூழலில், இடதுசாரி பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இலங்கையின் வெளியுறவு நிலைப்பாடு குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகையில் இலங்கை செயல்படும் என்றும், எந்தவொரு உலக வல்லரசின் ராணுவ உத்திகளுக்கும் இலங்கையின் மண் பயன்படாது என்றும் அதிபர் திசாநாயக்க வெளிப்படையாக உத்தரவாதம் அளித்துள்ளது இந்திய வெளியுறவு வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் 'அயலகக் கொள்கை'க்கும் இந்த நிலைப்பாடு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஞானேஷ்குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு..!! உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share