சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பிப்ரவரி 12ம் தேதி திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவரான நோபல் பரிசு பெற்றவர் முகமது யூனுஸ், பிப்ரவரி 12-ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று தெளிவாக அறிவித்துள்ளார். தேர்தல் தேதி தள்ளிப்போடப்படும் என்ற வதந்திகளை மறுத்து, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
முகமது யூனுஸ் தனது அறிக்கையில் கூறியதாவது: “தேர்தல் தொடர்பாக வேண்டுமென்றே பொய் செய்திகளும் குழப்பங்களும் பரப்பப்படுகின்றன. இடைக்கால அரசு தனது உறுதிப்பாட்டில் மாற்றமில்லாமல் உள்ளது. பிப்ரவரி 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஓட்டுப்பதிவு ஒரு நாள் முன்னதாகவோ அல்லது ஒரு நாள் கழித்தோ நடைபெறாது.
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியான சூழலிலும் நடைபெறும். பண்டிகை சூழலில் தேர்தல் நடைபெறும். தேர்தல் பணிகளில் இடைக்கால அரசு முற்றிலும் நடுநிலையாக செயல்படும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு மற்றும் பாரபட்சமற்ற நிர்வாகத்தை உறுதி செய்யப்படும்.”
இதையும் படிங்க: வங்கதேசத்துகாக என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு!! 17 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் மகன் பேச்சு!
தற்போது வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக ஹிந்து சமூகத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த சூழலில் தேர்தல் அறிவிப்பு மற்றும் அதன் நடைமுறைப்படுத்தல் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
முகமது யூனுஸின் இந்த உறுதிப்பாடு, தேர்தல் தேதி தள்ளிப்போடப்படும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் நடைபெறும் வரை அமைதியான சூழலை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இடைக்கால அரசுக்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேசத்துரோக வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு சிக்கல்! ஜனவரி 21ல் குற்றச்சாட்டு பதிவு!!