×
 

பார்க்கவே பயங்கரமா இருக்கே?... அமெரிக்க காடுகளில் வலம் வரும் ஜாம்பி முயல்கள்... மனிதர்களுக்கு ஆபத்தா?

அமெரிக்க காட்டில் வலம் ஒரு முயலின் அசாதாரணமான போட்டோ நெட்டிசன்களுக்கு அல்லு கிளப்பியுள்ளது. 

ஜாம்பி படங்களை பார்த்து, பார்த்து இப்போது மக்களுக்கு விநோதமாகவோ, அசிங்கமான தோற்றத்திலோ எதையாவது பார்த்தால் அதையும் ஜாம்பியாகவே பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த வகையில் அமெரிக்க காட்டில் வலம் ஒரு முயலின் அசாதாரணமான போட்டோ நெட்டிசன்களுக்கு அல்லு கிளப்பியுள்ளது. 

முகம் முழுக்க கொடூரமாக கொம்புகள் போன்ற அமைப்பைக் கொண்ட முயல்களின் போட்டோவை பார்த்து பயந்து போன நெட்டிசன்கள் அதற்கு ஜாம்பி முயல்கள் என பெயர் வைத்துள்ளனர். டென்வர் அருகே உள்ள ஃபோர்ட் காலின்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆன்லைனில் தொடர்ந்து முயல்களின் படத்தை பகிர்ந்து வருகின்றனர். அதனை பார்க்கவே பயங்கரமான தோற்றத்தில் இருப்பதால், இது முயல்களின்  ரெசிடென்ட் ஈவில் படம் போல திகில இருக்கு என கதறி வருகின்றனர். 

நெற்றி, கன்னங்கள், மூக்கு, வாய் என முகம் முழுவதும் கருப்பு நிறத்தில் வளர்ந்து கொம்புகள் க்யூட்டான முயல்களை கொடூரமான ஜாம்பியாக உருவகப்படுத்தியுள்ளது. கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் அறிக்கையின் படி, இது முயல்களுக்கு ஏற்பட்ட ஒரு தொற்றக்கூடிய தோல் நோய் என்றும், சில சமயங்களில் இந்த கரும்புள்ளிகள் கிடுகிடுவென வளர்ந்து கொம்புகள் போல நீண்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். ஷோப் பாப்பிலோமா என்ற வைரஸ் முயல்களின் முகத்தில் மருக்கள் போன்ற அமைப்பை உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு... அசத்தல் அறிவிப்புகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி..!

இதனால் பிற செல்லப்பிராணிகளுக்கோ, மனிதர்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், மக்கள் இப்படிப்பட்ட முயல்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: மதுரை மேயரின் கணவர் பொன்.வசந்த் என்னுடைய மகனா? - பொங்கியெழுந்து போலீசில் புகார் கொடுத்த முன்னாள் அமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share