வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!
சம்பவத்திற்கு பின்னர் அவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
ஆரல்வாய்மொழியில் வீட்டில் தனியாக இருந்த 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, காதில் அணிந்திருந்த கம்மல், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் காமக்கொடூரன் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அழகிய நகரை சேர்ந்த 105 வயது மூதாட்டி சொர்ணம் மீது நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியாக வசித்து வந்த மூதாட்டியை குறிவைத்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர் காதில் அணிந்திருந்த இரண்டு கிராம் தங்க கம்மல் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதாட்டி மயங்கி சுயநினைவு இழந்த நிலையில் வீட்டிற்குள் கிடந்துள்ளார். இந்நிலையில், தனது பாட்டியைப் பார்க்க வீட்டிற்கு வந்த அவரது பேத்தி ஆனந்தி (50) இந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதையும் படிங்க: கணவன் கண்ணெதிரே மனைவிக்கு பாலியல் தொல்லை... ராமேஸ்வரம் மண்ணில் கொடுமை... 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்...!
தகவல் கிடைத்தவுடன் ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸார் மற்றும் மகளிர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை மீட்டனர். பின்னர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அதே பகுதியை சேர்ந்த குட்டியான் (20) என்பவர் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கு பின்னர் அவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
105 வயது மூதாட்டி மீது நடைபெற்ற இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் சமூகத்தில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ச்சீ… மனுஷங்களா நீங்க? கணவன் கண்ணெதிரே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்…!