×
 

பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

பீகாருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகைக்கு முன்பாக கத்தியார் மாவட்டத்தைச் சேர்ந்த 17 முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்.

பீகாருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகைக்கு முன்பாக கத்தியார் மாவட்டத்தைச் சேர்ந்த 17 முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் காங்கிரஸில் இருந்து 17 முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைவது காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், 6 முறை எம்.பியாக இருந்த தாரிக் அன்வர் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்து, கட்சிக்குள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது, காங்கிரஸ் கட்சியின் வலிமை, நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியது. தாரிக் அன்வர் உயர்குடி மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார், அவரின் செயலும் பேச்சும் அவ்வாறுதான் இருக்கிறது என்று காங்கிஸ் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கமான ஐஎன்டியுசி தலைவர் விகாஸ் சிங் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: CWG 2010 வழக்கு: எங்க மேல தப்பு இல்ல.. மோடி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்கணும்.. கெத்தாக நெஞ்சை நிமிர்த்தும் காங்கிரஸ்..!

விகாஸ் சிங் கூறுகையில் “ இது சிறிய தொடக்கம்தான், ஏற்கெனவே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பாஜவில் வரும் நாட்களில் சேரப்போகிறார்கள். பீகார் மாநில அமைச்சர் நீரஜ் குமார் சிங் பாப்லு முன்னிலையில் பாட்னாவில் நடக்கும் நிகழ்ச்சியல் என் தலைமையிலான குழுவினர் பாஜகவில் இணைகிறோம். அது மட்டுமல்லாமல் உயர்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 தலைவர்களும் தாரிக் அன்வர் மீதான அதிருப்தியால் பாஜகவில் சேர்கிறார்கள்.

தாரிக் அன்வர் பணியாற்றும் செயல், உயர்குடிமக்களை ஒதுக்கி வைக்கும் விதத்தில் இருக்கிறது, ஏற்கெனவே இந்தியா கூட்டணி பின்னவைச் சந்தித்து வரும் நிலையில் தாரின் வர் செயல் மேலும் பலவீனமடையச் செய்யும். இதனால் தாரிக் அன்வருக்கு பாரம்பரியாக இருந்துவரும் ஆதரவு குறைந்து, அவரின் மதிப்பு வீழ்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் பின்னடைவைச் சந்திப்பார்” எனத் தெரிவித்தார்.

பீகாரில் உயர்குடி காங்கிரஸ் தலைவர்களுக்கும், தாரிக் அன்வருக்கும் கடும் மறைமுக மோதல் நிலவுகிறது. இதில் பீகாரில் குறிப்பிட்டபகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் உயர் குடி மக்கள், தாரிக் அன்வருக்கு எதிராகப் புறப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை விரைவில் காங்கிரஸ் கட்சி களையாவிட்டால், பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக தேர்தல் முடிவுகள் இருக்கும்.

ஆனால், தாரிக் அன்வர் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொதுவெளில் பதில் அளிக்க மறுத்துவிட்டார், தாரிக் அன்வர் மீதான விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு பீகார் மாநிலத்தில் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில நாட்களில் பீகாரில் பயணம் செய்ய இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் சேர்வது பெரிய பிரச்சினையை உருவாக்கும்.

இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது ஏன் நடவடிக்கையில்லை..? காங்கிரஸ் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share