×
 

பாலியல் வன்கொடுமை செய்தது யார்?... தூத்துக்குடி மாணவி வழக்கில் அடுத்த திருப்பம்... வெளியானது டி.என்.ஏ. ரிப்போர்ட் ரிசல்ட்...!

குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மாணவியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த குற்றவாளி தர்ம முனீஸ்வரன் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் , மாணவியின்  டிஎன்ஏ உடன் குற்றவாளி தர்ம முனிஸ்வரன் டிஎன்ஏவும் ஒத்துப்போவதாக பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி கடந்த பத்தாம் தேதி இரவு வீட்டிற்கு அருகே காட்டுப்பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற போது காணாமல் போனார். இதைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி மாலை அதே காட்டுப் பகுதியில் மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு,  கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மாணவி கொலை சம்பவத்தில் பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி தர்ம முனிஸ்வரன் மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: யார் அந்த சார்? - அண்ணா பல்கலைக்கழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்...!

இதைத் தொடர்ந்து தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி தர்ம முனீஸ்வரனை மருத்துவ பரிசோதனைக்காக திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து டிஎன்ஏ பரிசோதனை செய்தனர் 

இதனிடையே, தற்போது டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலில் இருந்த டிஎன்ஏவும் ஒத்துப் போவதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மாணவியை கடத்திச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது உறுதியாகி உள்ளது  வருகிற ஏப்ரல் 2ம் தேதி குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீண்டும் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 

இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share