சமைக்காத சிக்கனை சாப்பிட்டதால் விபரீதம்.. இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி
ஆந்திரா மாநிலத்தில் சமைக்காத சிக்கன் துண்டை சாப்பிட்டதால் இரண்டு வயது பெண் குழந்தை பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நரசரா பேட்டை சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அவரது பெற்றோர் சிறிய துண்டிலான வேக வைக்காத அதாவது சமையல் செய்யாத சிக்கனை ஊட்டி விட்டுள்ளனர். சிக்கனை சாப்பிட்ட குழந்தைக்கு சிறிது நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதனை அடுத்து பெற்றோர் பெண் குழந்தையை அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆந்திராவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சொத்து தகராறில் அரங்கேறிய பயங்கரம்.. தந்தையை வெட்டி படுகொலை செய்த மகன்
இந்த நிலையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பறவை காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் சிறுமியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்ன பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சிக்கன் சமைக்காத நிலையில் கொடுக்கப்பட்டதாலே சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக சாதி- மத 'பீம்-மீம்' பாகுபலிகளை தூண்டும் காங்கிரஸ்..! பரபர ட்விஸ்ட்..!