×
 

கார்கில் வெற்றி தினம் 2025.. பாக்.-ஐ வீழ்த்தி இந்திய தேசியக்கொடியை நிறுத்திய தருணம்..!!

2025-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியான இன்று 26வது கார்பில் போர் தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

1999-ம் ஆண்டு மே முதல் ஜூலை வரை நடைபெற்ற கார்கில் போர், இந்தியாவின் இராணுவ வீரத்தையும் தேசபக்தியையும் உலகுக்கு உணர்த்திய ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜம்மு-காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, உயரமான மலைப்பகுதிகளில் உள்ள முக்கிய பகுதிகளைக் கைப்பற்ற முயன்றனர். இந்திய இராணுவம் இதனை உடனடியாக எதிர்கொண்டு, "ஆபரேஷன் விஜய்" என்ற பெயரில் பதிலடி தாக்குதலைத் தொடங்கியது.

கடுமையான பனிப்பொழிவு, உயரமான மலைப்பகுதிகள் மற்றும் எதிரியின் மறைவிடங்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்திய வீரர்கள் துணிச்சலுடன் போராடினர். டைகர் ஹில், டோலோலிங் உள்ளிட்ட முக்கிய மலை உச்சிகளை மீட்க, இந்திய விமானப்படையின் ஆதரவுடன் இராணுவம் தீவிரமாகச் செயல்பட்டது. இந்தப் போரில் இந்தியாவின் இளம் அதிகாரிகளும் வீரர்களும் உயிர்த் தியாகம் செய்து, தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாத்தனர். 

இதையும் படிங்க: ரூ.4,850 கோடி கடன்.. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் மாலத்தீவு.! கழட்டி விடப்பட்ட சீனா!!

கடும் குளிர், தொடர் குண்டு வீச்சி, எங்கு பார்த்தாலும் தூப்பாகி தோட்டாக்கள், கண் மூடி திறந்தால் கொத்துக்கொத்தாக செத்து கிடக்கும் உடல்கள் என சுமார் 2 மாதங்கள் பனி மலையில் தாக்குபிடித்து முன்னேறி கொண்டே இருந்தது இந்திய ராணுவம். இந்திய ராணுவ தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கியது பாகிஸ்தான். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை, தொடர் போராட்டம் என இறுதியாக 1999ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி மீண்டும் கார்கில்லை கைப்பற்றியது இந்தியா. இந்த வெற்றி, இந்தியாவின் ஒற்றுமையையும், இராணுவத்தின் அசாத்திய திறனையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது. 

கார்கில் போரில் 527 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், மேலும் 1400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 4,000 வீரர்கள் இறந்தனர். கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினன்ட் மனோஜ் பாண்டே உள்ளிட்ட வீரர்களின் தியாகங்கள் இன்றும் நினைவு கூரப்படுகின்றன. கார்கில் மலையில், பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றிகரமாக வெளியேற்றி இந்திய தேசிய கொடியை காட்டியது நம் ராணுவம். இந்தப் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று "கார்கில் விஜய் திவாஸ்" கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில் ஜூலை 26ம் தேதியான இன்று, இந்தியா தனது 26வது கார்கில் வெற்றி தினத்தை உற்சாகத்துடனும், பெருமையுடனும் கொண்டாடுகிறது. இந்நாளில், லடாக்கில் உள்ள திராஸ் கார்கில் போர் நினைவகத்தில் மரியாதை செலுத்தும் விழாக்கள், மாலை அணிவித்தல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கார்கில் வீரர்களின் தியாகத்தைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும் வீரத்தையும் இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் "தேசிய போர் நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இதேபோல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு தாய் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். இந்த நாள் நமது வீரர்களின் அசாதாரண தைரியம், துணிச்சல் மற்றும் உறுதியான உறுதியை குறிக்கிறது. தேசத்திற்காக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த தியாகம் என்றென்றும் மக்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த நாள், இந்திய மக்களுக்கு தேசபக்தியையும், வீரர்களின் தியாகத்தையும் நினைவூட்டுகிறது. கார்கில் போர், இந்தியாவின் உறுதியையும், எதிரிகளுக்கு எதிரான தன்னம்பிக்கையையும் உறுதிப்படுத்திய ஒரு மைல்கல். இந்த வெற்றி, இந்திய இராணுவத்தின் திறமைக்கும், தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒரு சான்றாக விளங்குகிறது.
 

இதையும் படிங்க: வேகமாக அதிகரிக்கும் எய்ட்ஸ் பாதிப்பு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மேகாலயா அரசு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share