×
 

பெரிய சதித் திட்டத்தோடு வந்துருக்காங்க! பீகாருக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை..!

பீகாருக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிற்குள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிவினையடைந்த 1947ஆம் ஆண்டு முதல் ஒரு நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தத் தாக்குதல்கள் காஷ்மீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு, அரசியல், மத, மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் உந்தப்பட்டு, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன. 

1947-ல் இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக உருவாகின. காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிலை குறித்த பிரச்சினை முதல் இந்திய-பாகிஸ்தான் போருக்கு வழிவகுத்தது. இந்தப் போர் காஷ்மீரை இரு பகுதிகளாகப் பிரித்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை உருவாக்கியது. 

இந்தப் பிரிவு இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த பதற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள், குறிப்பாக காஷ்மீரை மையமாகக் கொண்டு, இந்தியாவில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர், இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. தற்போது உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மிகப்பெரிய சதித் திட்டத்துடன் பீகாருக்குள் மூன்று தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: தனி விமானத்தில் பீகார் பறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... இன்று ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம்...!

நேபாளம் வழியாக ஜெய் ஸ்ரீ முகமது பயங்கரவாதிகள் மூன்று பேர் பீகாருக்குள் நுழைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாதிகள் மூவரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை மாநிலம் முழுவதும் ஒட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் முக்கிய இடங்கள், அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆதாரும் ஆவணம் தான்! விண்ணப்பியுங்கள்... SIR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share