×
 

காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி இறந்த குழந்தைகள்.. ஆந்திராவில் அரங்கேறிய சோகம்..

4 குழந்தைகளும் அங்கு பார்க் செய்யப்பட்டிருந்த காரின் கதவை திறந்து ஏறிக் கொண்டனர். அப்போது, காரின் கதவுகள் ஆட்டோ மேட்டிக்காக லாக் ஆகி விட்டது. குழந்தைகள் காரில் ஏறியதை யாரும் கவனிக்கவில்லை.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடியைச் சேர்ந்தவர் பர்லி ஆனந்த். அவரது மனைவி உமா. இவர்களது  மகள்கள் ஜஷ்ரிதா (வயது 8) மற்றும் சாருமதி (வயது 7). ஆனந்தின் நண்பர் சுரேஷின் ஒரே மகள் மானஷ்வினி (வயது 6), பக்கத்து வீட்டுக்காரர் புச்சு நாயுடுவின் மகன் உதய் (வயது 7). நேற்று காலை 4 குழந்தைகளும் வீட்டுக்கு அருகில்  விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென லேசாக மழை பெய்தது. 4 குழந்தைகளும் அங்கு பார்க் செய்யப்பட்டிருந்த காரின் கதவை திறந்து ஏறிக் கொண்டனர்.அப்போது, காரின் கதவுகள் ஆட்டோ மேட்டிக்காக லாக் ஆகி விட்டது. குழந்தைகள் காரில் ஏறியதை யாரும் கவனிக்கவில்லை. 

நீண்ட நேரமாக குழந்தைகள் வீட்டுக்கு வராததால், பெற்றோர்கள் தேடத் துவங்கினர். அதே தெருவில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. அங்கு சென்றிருப்பார்கள் என போய் பார்த்தனர். ஆனால், அங்கும் இல்லை. கிராமத்தில் குழந்தைகள் விளையாடும் எல்லா இடங்களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர்.  ஆனால் வீட்டின் அருகில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. மாலை வரை தேடியும் கிடைக்காததால் பிள்ளைகளுக்கு என்ன ஆச்சோ என பெற்றோர்கள் பதறத் துவங்கினர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்.. அண்ணனையே போட்டுத் தள்ளிய தங்கை..!

மாலை 5:30 மணியளவில், ஒரு வாலிபர் எதேச்சையாக கார் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தார். குழந்தைகள் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பெற்றோர்கள் ஓடிவந்து கார் கண்ணாடிகளை  உடைத்து குழந்தைகளை வெளியே எடுத்தனர். ஆனால் அப்போதும் குழந்தைகள் பேச்சு மூச்சற்று கிடந்தனர். அருகிலுள்ள மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள், மூச்சுத் திணறல் காரணமாக 4 பேரும் இறந்து விட்டதாக கூறினர். 

இதனை கேட்ட பெற்றோர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஊராரும் அழுதனர். ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. காரை பார்க் செய்தபோது கதவுகள் சரியாக லாக் ஆகியிருக்கிறதா? என ஓனர் கவனிக்காமல் சென்று விட்டார். மூடாமல் இருந்த கதவு வழியாக 
குழந்தைகள் உள்ளே ஏறி விளையாடியபோது, ஆட்டோ மேட்டிக் லாக் சிஸ்டத்தால் கதவுகள் மூடிக் கொண்டன.

நீண்ட நேரம் வெளிக்காற்று இல்லாததாலும், நேரம் செல்லச் செல்ல வெயில் கொளுத்தியதாலும் காருக்குள்ளேயே 4 குழந்தைகளும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் ஓனரை தேடி வருகின்றனர். இறந்த குழந்தைளின் பெற்றோருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சர் வாங்கலபுடி அனிதா பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: என் போன் 12,000 ரூபா? நீ கொடுப்பியா? செல்போனை பிடுங்கி வைத்த ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share