சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் என்ட்ரி.. சிக்கிய 4 சீனர்கள்..!
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்கியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா-நேபாளம் எல்லையில், பீகார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சீனாவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் நேபாளம் அருகே இருக்கும் ராக்ஸுல் எல்லைப்பகுதி வழியாக சீனர்கள் நுழைய முயன்றனர். இது சரியாக, பாகிஸ்தான், ஆக்கிரமிப்புகாஷ்மீர் மீது இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்திய சிலமணி நேரத்தில் சீனர்கள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று கைதாகினர்.
சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) படையினர் ரக்ஸல் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்எஸ்பி படைதரப்பில் கூறுகையில் “நேபாளாத்தைச் சேர்ந்த 2 பெண்கள் வழிகாட்டலுடன் சீனாவைச் சேர்ந்த 4 பேர் பீஹார் எல்லைப் பகுதிக்குள் சட்டவிரோதமாக வந்தனர். அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம், இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்களிடம் சட்டப்பூர்வ விசா இல்லை. ஆனால், சட்டவிரோதமாக நேபாளம்-இந்தியா எல்லைக்குள் வந்து, பீஹார் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பில் எடுத்து, ரக்ஸல் காவல்நிலையத்தில் வைத்துள்ளோம்”எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்.. அண்ணனையே போட்டுத் தள்ளிய தங்கை..!
எஸ்எஸ்பி படையின் ஆய்வாளர் விகாஸ் குமர் கூறுகையில் “ சீனாவில் இருந்து நேபாளம் வழியாக பீகாருக்குள் 4 சீனர்கள் நுழைய முயன்று பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 2 சீன பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் லி துங்கதே, டென் பிஜோன், ஹின் யுன் ஹெயின்சே, ஹூவாங் லிபின் என்று பெயரை தெரிவித்தனர். இவர்களிடம் இருந்த மொபைல் போன்கள், சீன கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேபாள வழிகாட்டிகள் முறையான விசாரணைக்குப்பின் விடுவிக்கப்படுவார்கள். சீனாவிலிருந்து நேபாளம் வழியாக பீகாருக்குள் ஏன் சட்டவிரோதமாக வருவதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இவர்கள் கைது குறித்து மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கிழக்கு சம்பரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்வர்ணா பிரஹாத் கூறுகையில் “ பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்எஸ்பி படையினர், போலீஸார் இணைந்து எல்லைப்பகுதியில் தீவிரப்பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்க கிட்டயேவா? மிரட்டியவரை அலேக்காக தூக்கி ஜெயிலில் போட்ட சீமான்.. தரமான சம்பவம்!!