கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தில் அசம்பாவிதம்... 5 பேர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலி...!
ஐதராபாத்தில் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி ஐந்து பேர் இறந்தனர்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ராமந்தாபூரில் உள்ள கோகுல்நகரில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேரில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில் நள்ளிரவில் கிருஷ்ணரை அமரவைத்து அலங்கரிக்கப்பட்ட வாகனம் பழுது ஏற்பட்டதால் வாகனத்தை தனியாக கழற்றி அப்பகுதி இளைஞர்கள் தேரை கையால் முன்னோக்கி இழுக்க வேண்டியிருந்தது.
அவ்வாறு கைகளால் இழுத்து கொண்டு சென்றபோது தேர் மின்சார கம்பிகளில் மோதியது. இதனால் தேரை இழுத்து வந்த ஒன்பது பேருக்கு மின்சாரம் தாக்கி அனைவரும் தூக்கி எறியப்பட்டனர். இந்த சம்பவத்தால் திடீரென பீதியடைந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காயமடைந்தவர்ககை முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் கிருஷ்ணா யாதவ் (21), சுரேஷ் யாதவ் (34), ஸ்ரீகாந்த் ரெட்டி (35), ருத்ரவிகாஸ் (39), மற்றும் ராஜேந்திர ரெட்டி (45) ஆகிய ஐந்து பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெடியா மக்களே... தீபாவளிக்கு ரெயிலில் புக்கிங் தொடங்கிடுச்சு... காத்திருந்த பயணிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி..!
இறந்தவர்கள் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உப்பல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு இதுவே வழி... அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்த அன்புமணி ஐடியா...!