×
 

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்... 4 இந்தியர்கள் துடிதுடித்து பலி...!

வணிகக் கப்பல்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் இனி நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

நேற்று உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இந்த கப்பலில் 5 இந்தியர்கள் இருந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

எம்.வி. கோல்டன் லியோ என்ற சரக்கு கப்பல் நேற்று புறப்பட்ட நிலையில், அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான அந்த ஐந்து இந்தியர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேலும், இதுபோன்ற தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், குறிப்பாக வணிகக் கப்பல்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி பொதுமக்களின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, வணிகக் கப்பல்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் இனி நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share