×
 

5 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பகல்காம் தாக்குதலுக்கு பழிக்குப்பழி..!

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏழாம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது இந்த தாக்குதலில் ஐந்து முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கொல்லப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் மசூத் அசார் உயிரோடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு பதிலடி.. சுக்கு நூறாகிய சர்கோதா விமானப்படை தளம்.. இந்தியா அதிரடி..!

இதனிடையே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா சார்பில் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் முக்கிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்துவதால் பதற்றமான சுழல் நிலவுகிறது.

இதையும் படிங்க: முதல் முறையாக மு.க.ஸ்டாலினை பாராட்டிய அண்ணாமலை... எதற்கு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share