மொத்தம் ரூ.1.41 கோடி பரிசு!! ஆட்டம் காட்டி வந்த 51 நக்சல்கள் சரண்!! அமைதிக்கு திரும்பும் சத்தீஸ்கர்!
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், 1.41 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட, 49 பேர் உட்பட 52 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற்றது. மொத்தம் 52 நக்சல்கள் போலீசிடம் சரணடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர் பெண்கள். இந்த சரணடைப்பு தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு, மஹாராஷ்டிராவின் பம்ரஹார் பகுதி மற்றும் ஆந்திரா-ஒடிஷா எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்களை உள்ளடக்கியது.
இவர்களில் 49 பேருக்கு மொத்தம் 1.41 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கை இவர்களை ஈர்த்துள்ளது என்று பிஜப்பூர் மாவட்ட எஸ்.பி. ஜிதேந்திர குமார் யாதவ் தெரிவித்தார். இந்தக் கொள்கையின் காரணமாகவே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சரணடைந்தவர்களில் சிலர் மிக முக்கியமான பதவிகளில் இருந்தவர்கள். டிவிஷனல் குழு உறுப்பினரான லக்கு கரம் (32 வயது), மாவோயிஸ்ட் படைப்பிரிவு உறுப்பினர்களான லட்சுமி மத்வி (28), சாந்தி (28) ஆகியோர் இதில் அடங்குவர்.
இதையும் படிங்க: ஒடிசா, சத்தீஸ்கரை அலற விட்ட கும்பல்! கண்ணிவெடி, கொரில்லா தாக்குதல் நடத்திய நக்சல்கள் 27 பேர் சரண்!
இவர்கள் மூவருக்கும் தலா 8 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர, தலா 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மேலும் 13 நக்சல்களும் இந்த சரணடைப்பில் இடம்பெற்றுள்ளனர்.
சரணடைந்த அனைவருக்கும் மாநில அரசு உடனடியாக தலா 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளது. மேலும், அவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, கல்வி வசதி, வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வு சத்தீஸ்கரில் நக்சல் இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இதுபோன்ற சரணடைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மீண்டும் நிலவும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. மாநில அரசின் மறுவாழ்வு திட்டங்கள் நக்சல் இயக்கத்தில் இருந்து வெளியேற விரும்புவோருக்கு புதிய வாழ்க்கை வாய்ப்பை அளித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஒடிசா, சத்தீஸ்கரை அலற விட்ட கும்பல்! கண்ணிவெடி, கொரில்லா தாக்குதல் நடத்திய நக்சல்கள் 27 பேர் சரண்!