×
 

மோடியின் அடுத்த அஸ்திரம்..! 7 கட்சி எம்பி.க்கள் குழுவில் சசிதரூர், கனிமொழிக்கு இடம்..!

மத்திய அரசு அனுப்பியுள்ள 7 கட்சி எம்பி.க்கள் குழுவில் சசி தரூர், கனிமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல், பதிலடியாக நடத்தப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் பொறுக்க முடியாத மனநிலை ஆகியவற்றை நட்பு நாடுகளுக்கும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளுக்கு விளக்கம் அளிக்கவும் 7 கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.

இந்த 7 கட்சி எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பாஜகவின் ரவி சங்கர் பிரசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார் ஜா, பாஜகவின் பைஜெயந்த் பாண்டே, திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 7 எம்.பிக்களும் தலைமையிலும் ஒரு அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். 

இதையும் படிங்க: திடீரென நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பாக். தூதரக ஊழியர்.. என்ன காரணம்?

இது குறித்து நாடாளுமன்ற விவாகரத்துறை அமைச்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் “தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்கள், உருவங்களை எதிர்க்கும் இந்தியாவின் தீர்க்கமான மனநிலை, தேசத்தின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த எம்.பி.க்கள் குழுவினர் இந்தியாவின் மனநிலையை, தீவிரவாதத்துக்கு எதிரான வலிமையான செய்தியை உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறுவார்கள். அனைத்து கட்சிகளிலும் இருந்து எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்பதால், மிகுந்த கவனத்துடன் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையிலான எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பாஜகவின் ரவி சங்கர் பிரசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார் ஜா, பாஜகவின் பைஜெயந்த் பாண்டே, திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் 4 எம்.பி.க்கள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பிக்கள், மற்ற 3 பேர் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்” எனத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குழுவும் 5 நாடுகளுக்கு செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு எம்.பி குழுவிலும் அதிகாரிகள் துணையாகச் செல்வார்கள். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்து தீவிரவாதிகளை அழித்தது குறித்தும், தொடர்ந்து எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இந்தியா எதிர்கொண்டுவருவது குறித்தும் உலக நாடுகளுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளுக்கும் எம்.பி.க்கள் குழுவினர் விளக்கம் அளிப்பர்.  

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பாரதம் ஒன்றுதிரண்டுள்ளது. 7 கட்சிகளின் எம்.பி.க்கள் விரைவில் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு பயணித்து, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மனநிலையை தெளிவுபடுத்த உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வதந்திகளை நம்பாதீங்க மக்களே..! கையிருப்பு அதிகமாக இருக்கிறது.. மத்திய அரசு விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share