பிரதமர் மோடி பிறந்த மண்ணில் இப்படியா? - 78 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த விடிவு...!
குஜராத் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அல்வாடா கிராமத்தில் 78 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுதந்திரம் பிறந்த 79 வது ஆண்டை கொண்டாடும் இதே காலக்கட்டத்தில் சாதிய வன்கொடுமை எந்த அளவிற்கு மக்களிடையே வேரூன்றி இருக்குறது என்பதற்கு சிறந்த உதாரணம் ஒன்று அரங்கேறியுள்ளது. குஜராத் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அல்வாடா கிராமத்தில் 78 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நாளில், 24 வயதான விவசாயத் தொழிலாளி கீர்த்தி சவுகான் அங்குள்ள சலூன் கடையில் முடி திருத்தியிருக்கிறார். ஒரு தனி மனிதன் முடி திருத்திக் கொண்டதில் என்ன வரலாற்றுச் சிறப்பிருக்கு? இது அன்றாடம் நடக்கும் சம்பவம் தானே என நீங்கள் சொல்வது எங்களுக்கு கேட்கிறது. ஆனால் அந்த சலூன் கடையில் 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு முடி திருத்தப்பட்டுள்ளது.
அல்வாடாவில் சுமார் 6,500 பேர் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 250 பேர் தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்களுக்கு உள்ளூர் சலூன் கடைக்காரர்கள் முடி திருத்த மறுத்து வந்துள்ளனர். இதனால் பக்கத்து கிராமத்திற்குச் சென்று தான் அந்த சமூக ஆண்கள் முடி திருத்தி வந்தனர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என விவசாய கூலித் தொழிலாளியான கீர்த்தி சவுகான் முடிவெடுத்தார்.
இதையும் படிங்க: ஆக.19ம் தேதி கூடுகிறது NDA MP-க்கள் கூட்டம்..!! நடக்கப்போகும் முக்கிய நிகழ்வு என்ன..??
மனதில் உறுதியுடன் உள்ளூர் சலூன் கடைக்குச் சென்று தனக்கு முடி வெட்டும் படி அமர்ந்தார். ஆனால் கடைக்காரர் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் போராட்டம் வெடித்தது, சமூக சேவகர் சேதன் தாபி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மத்தியஸ்தம் ஏற்பட்டத்தை அடுத்து கிராமத்தில் உள்ள ஐந்து முடிதிருத்தும் கடைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் முடி திருத்த அனுமதி அளிக்கப்பட்டது. இது வெறும் முடி திருத்தும் பிரச்சனையாக அல்ல, சமூக முன்னேற்றத்தில் முக்கியமான ஒரு படியாக அப்பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் துறையில் வேலை பெற்றால் ரூ.15 ஆயிரம் நிதி உதவி.. அள்ளிக் கொடுக்கும் பிரதமர் மோடி..!